ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
இணைய சேவையின் வேகத்தை பரிசீலனை செய்வதற்கு வசதி

இணைய சேவையின் வேகத்தை பரிசீலனை செய்வதற்கு வசதி

htt//www.speedtest.trc.gov.lk

இணைய சேவையின் வேகத்தை பரீட்சித்துப் பார்க்கக் கூடிய வகையில் சகல புரோட் பேண்ட் (Broad band) இணையத்தள சேவை களையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தொலைத் தொடர்பு ஒழுங்கு படுத்தல் ஆணைக்குழு தெரிவித்தது. சேவை வழங்குநரினூடாக வழங்கப்படும் ‘புரோட்பேண்ட்’ இணையத்தள இணைப்பு வேகத்தை பாவனையாளர்கள் தாமாக அறிய இந்த புதிய முறை உதவுமென ஆணைக் குழு கூறியது. உலகில் பல்வேறு நாடுகளில் இணையத் தள சேவை வழங்கும் நிறுவனங்கள் பாவனையாளர்களுக்கு வழங்கும் இணையத்தள வேகத்தை அளவிடும் வசதியை தொலைத்தொடர்பு நிறுவனமொன்று வழங்குவதே இதுவே முதற்தடவையாகும். ஆணைக்குழுவினூடாக மேம்படுத்தப்பட்ட இந்தத் தொகுதியினூடாக உலகில் வேறு நாடுகளின் சேமிப்பகக் (ஷிலீrvலீr) வேகத்தையும் ஒப்பிட்டு பார்க்க முடியும்.

பாவனையாளர்க்கு தொலைத் தொடர்பு ஆணைக்குழுவின் http://www.speedtest.trc.gov.lk/TRCspeed/broadband.php எனும் இணைய பக்க இணைப்பு ஊடாக இணையத்தளத்தின் வேகத்தை இலகுவாக அறியலாம் என அறிவிக்கப்படுகிறது.

தமது இணையத்தள இணைப்பு வேகத்தை அறிய முடியாததால் பாவனையாளர்களுக்கு முகம்கொடுக்க நேரிட்ட சிக்கல் இதன் மூலம் தீரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி