ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

ரஞ்சன் மாத்தாய், சிவ்சங்கர் மேனன் ஆகியோர் நீதிமன்றை அவமதித்ததாக குற்றச்சாட்டு

ரஞ்சன் மாத்தாய், சிவ்சங்கர் மேனன் ஆகியோர் நீதிமன்றை அவமதித்ததாக குற்றச்சாட்டு

இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் நடத்துவது தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவினை மத்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தி மீண்டும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மேல் நீதிமன்றில் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மீனவர்களுக்கு போதியளவு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென சென்னை மேல் நீதிமன்றம் கடந்த 14ம் திகதி உத்தரவு பிறப்பித்திருந்தது.

உலங்கு வானூர்திகள் போன்றவற்றை பயன்படுத்தி எல்லை கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருந்தது.

எனினும், இந்த உத்தரவினை மத்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் உரிய முறையில் நடைமுறைப்படுத்தத் தவிறியுள்ளதாகக் குற்றம் சுமத்தி தமிழக சட்டத்தரணி ஸ்டாலின் என்பவர் மேல் நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

மத்திய அமைச்சின் செயலாளர் அஜித் குமார் சேத், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், பாதுகாப்புச் செயலாளர் சசிகாந்த் சர்மா, வெளிவிவகார செயலாளர் ரஞ்சன் மாத்தாய் உள்ளிட்ட சில அதிகாரிகள் வேண்டுமென்றே நீதிமன்றத்தின் உத்தரவினை உதாசீனம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி