ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரலாம்

மார்பக புற்றுநோய் ஆண்களுக்கும் வரலாம்

ஓமோன் ஏற்றத்தாழ்வு காரணமாக ஆண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரலாம் என்று டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.

கான்பூரில் உள்ள ஜே. கே. புற்றுநோய் மருத்துவமனையில் நடந்த கூட்டத்தில் மார்பக புற்றுநோய்க்கான சிறப்பு நிபுணர் ரோஷினி ராவ் பேசுகையில் மார்பக புற்றுநோய் என்பது பெண்களை மட்டுமே தாக்கும் என்று மக்கள் கருதுகின்றனர். ஆனால், அது ஆண்களையும் தாக்கும் என்ற விழிப்புணர்வு இல்லாமல் மக்கள் உள்ளனர். இதனால் பலர் பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும்.

மார்பக பகுதிகளில் சிக்கல், ஓமோன்களில் சமநிலை இல்லாத நிலையில்40 வயது தாண்டிய ஆண்களுக்கு மார்பக புற்றுறோய் தாக்க வாய்ப்புள்ளது. விழிப்புணர்வு இல்லாமை, நோய் பற்றி தெரிந்துகொள்வதில் காட்டும் தயக்கம் காரணமாக பெரும்பான்மையினர் பாதிக்கப்படுகின்றனர். மேலும் இந்நோய் ஆண்களைவிட பெண்களுக்கே அதிகம் வர வாய்ப்புள்ளது. மார்பக புற்றுநோய் அறிகுறியின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் அதிலிருந்து முழுமையாக மீளலாம். முற்றிய நிலையில் வருவதாலே பலர் இறக்க நேரிடுகிறது.

மார்பு, அக்குள் பகுதியில் வீக்கம், சீல் வட்டம், உருவமற்ற கட்டி வந்தால் அது மார்பக புற்றுநோய்க்கான அறிகுறிகள். இவைகள் தென்பட்ட உடனே சிகிச்சை பெற்றால் முற்றிலும் தீர்வு காணப்படும் என்று ரோஷினி தெரிவித்தார்.

மார்பக புற்றுநோயை அறிய முலை ஊடுகதிர்படத்தை (மமோகிராபி) பயன்படுத்தலாம். ஆனால், இது ஆண்களுக்கு உகந்ததாக இருக்காது மேலும், எம். ஆர். ஐ. சிடி ஸ்கேன் மற்றும் அலட்ராசவுண்ட் முறைகளை பின்பற்றி அறிந்து கொள்ளலாம். உடல் பருமன், கொழுப்பு நிறைந்த இளம் பெண்களைகூட அதிக அளவில் மார்பக புற்றுநோய் தாக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக மார்பு பகுதியில் கட்டி, சீல் வட்டம் தென்பட்டால் 40 வயதை தாண்டிய அனைவரும் டாக்டர்களின் ஆலோசனை பெறுவது அவசியம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

இறக்கை இல்லாத கோழி

இஸ்ரேல் விஞ்ஞானிகள் புதிய ரக கோழியினத்தை உருவாக்கியுள்ளனர். இறைச்சிக்காக அதிகம் வளர்க்கப்படும் கோழியினமான பிரொய்லர் வகை கோழிகளை இறக்கை, இறகுகள் என எதுவும் இல்லாமல் உரித்த கோழி போன்று உருவாக்கியுள்ளனர். பிரொய்லர் கோழிகளை எளிதாகக் கையாளுவதற்கே இந்தத் திட்டம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த வகை கோழிகளுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோழிகளுக்கு இறகுகள் இல்லாமல் இருந்தால் சிறு கொசுகூட அவற்றைத் தாக்கிவிடும். பல்வேறு நோய்கள் தொற்றுவதற்கு இது எளிதாக அமைந்துவிடும். மனிதனைப் போலவே கோழிகளை உருவாக்க நினைப்பது முட்டாள்தனமான காரியம். இது மோசமான அறிவியல் வளர்ச்சியைக் காட்டுகிறது. கோழிகளின் இறகு, இறக்கை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு பயன்பாட்டுக்கு படைக்கப்பட்டுள்ளது என ஏகத்துக்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி