ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

கிaஸ் பிரதமர் பதவி விலக வேண்டும் : 4 அமைச்சர்கள் உட்பட மூத்த எம்.பி.க்கள் கோரிக்கை

கிaஸ் பிரதமர் பதவி விலக வேண்டும் : 4 அமைச்சர்கள் உட்பட மூத்த எம்.பி.க்கள் கோரிக்கை

ஐரோப்பிய யூனி யனின் நிதி யுதவியை ஏற்பது தொடர்பாக வாக்கெடுப்பு நடத்தப் படும் என்று கிaஸ் பிர தமர் ஜார்ஜ் பப்பாண் ட்ரூவின் அறிவிப்புக்கு நிதியமைச்சர் இவாஞ் சலோஸ் உள்ளிட்ட 4 அமைச்சர்கள் எதிர்ப்பு தெரி வித்துள்ளனர்.

அத்துடன், பிரதமர் பதவி விலக வேண்டும் என்றும் அவரது கட்சியைச் சேர்ந்த மூத்த எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதற்கிடையே, பப்பாண்ட்ரூ பிரதமர் பதவியை ராஜினாமா செய்யப் போவதாக தகவல் வெளியானது. ஆனால், இதை கிaஸ் அரசு தொலைக்காட்சி மறுத்துள்ளது. இந்நிலையில், வாக் கெடுப்பு நடத்து வதை கைவிடுவது குறித்து பரிசீலித்து வருவதாக கூறப் படுகிறது.

இது தொடர் பாக பப்பாண்ட்ரூ தனது பசோக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்களை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார்.

நாடாளுமன்றத்தில் அவர் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது.

மொத்தம் உள்ள 300 உறுப்பினர்களில் பசோக் கட்சியைக் சேர்ந்தவர்கள் 152 பேர் மட்டுமே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி