ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 07
கர வருடம் ஐப்பசி மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, NOVEMBER,04, 2011


 

Print

 
மெளன விரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

மன அமைதி வேண்டி

மெளன விரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

மன அமைதி வேண்டி தனது சொந்த கிராமத்தில் மெளன விரதம் மேற்கொண்ட அன்னா ஹசாரே தனது மெளன விரதத்தை முடித்துக் கொண்டார். கடந்த மாதம் 16ம் திகதி முதல் மெளன விரதம் மேற்கொண்டி ருந்தார் அன்னாஹசாரே நாடாளுமன்றில் வரும் மழைக்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்பட உள்ள லோக்பால் மசோதா குறித்து நிலைக்குழு இன்று கூட உள்ளது. இதனை முன்னிட்டு கூட்டத்தில் கலந்து கொள்ளும் விதமாக புதுடில்லிக்கு வந்த ஹசாரே ராஜ்கோட்டில் தனது மெளன விரதத்தை முடித்தார். நிலைக் குழுவில் அன்னா ஹசாரே குழுவை சேர்ந்த கிரண்பேடி, கெஜ்ரிவால் உட்பட பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]