ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 07
கர வருடம் ஐப்பசி மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, NOVEMBER,04, 2011


 

Print

 
வெந்த புண்ணில் வேல் பாய்;ச்சுகிறார்கள மத்திய அரசு மீது முதலமைச்சர் nஜயலலிதா சாடல்

வெந்த புண்ணில் வேல் பாய்;ச்சுகிறார்கள மத்திய அரசு மீது முதலமைச்சர் nஜயலலிதா சாடல்

விலைவாசி உயர்வு காரணமாக ஏற்கெனவே மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாகவும், நிர்வாகத்திறமையின்மை காரணமாகவும் அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கிறது.

இந்த நிலையில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை அவ்வப்போது உயர்த்தி வருகிறது. ஏழை, எளிய, சமானிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி கொஞ்சமும் கவலை கொள்ளாமல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றுக்கான விலையை மத்திய அரசு உயர்த்தியது. இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 15ம் திகதி பெட்ரோலின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டது. இரண்டு மாதங்களுக்குள்ளாகவே பெட்ரோலின் விலையை லீட்டருக்கு 1 ரூபாய் 82 காசு என்ற அளவில் மீண்டும் கணிசமாக மத்திய அரசு வியாழக்கிழமை (நவம்பர்3) உயர்த்தியுள்ளது.

வெந்த புண்ணில் வேல்.

பெட்ரோல் விலை உயர்வால் இரு சக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசியை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு பதிலாக, விலை வாசியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத்தான் மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.

விலைவாசி உயர்வால் இன்னல்களை இந்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டு கண்ணீர் சிந்திக் கொண்டி ருக்கும் வேளையில் தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.

எனவே, பெட்ரோல் விலை உயர்வு எவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதுடன், இந்த உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]