ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 50 பேர் மீது சி.ஐ.டி விசாரணை

பிரிட்டனிலிருந்து நாடுகடத்தப்பட்ட 50 பேர் மீது சி.ஐ.டி விசாரணை

பிரிட்டனில் இருந்து நாடு கடத்தப்பட்ட 50 இலங்கையர்களும் நேற்று சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மெக்ஸி புரொக்டர் தினகரனுக்குத் தெரிவித்தார்.

புகலிடக் கோரிக்கை மறுக்கப்பட்ட 50 இலங்கையர்களையும் நாட்டுக்கு திருப்பி அனுப்ப பிரித்தானிய அரசு தீர்மானித்திருந்தது. இதன்படி அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 42 ஆண்களும் 8 பெண்களும் நேற்று காலை 10.20 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக இலங்கையை வந்தடைந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

இவர்களிடம் பிரித்தானியாவில் தங்கியிருப்பதற்கான விஸா இல்லாததால் அங்கிருந்து நாடுகடத்தப்பட்டுள்ளதாகவும் இவர்கள் சி. ஐ. டி.யினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]