ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம்

புலிகளின் பொறுப்பற்ற செயலால் நூற்றுக்கணக்கான உயிர்களை இழந்தோம்

விசாகன்

"புலிகள் இயக்கத்தில் இருந்த போது ஷெல் தாக்குதலில் காயமடைந்து ஊனமடைந்திருந்தாலும் உறுதியுடன் இருக்கிறேன். புலிகளின் பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கைகளினால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார் எல்.ரீ.ரீ.ஈ. இயக்கத்தின் முன்னாள் போராளியான குணசிங்கம் விசாகன் (28 வயது).

புலிகளில் இருந்த போது பல்வேறு துண்புறுத்தல்களுக்குள்ளாகி மயிரிழையில் உயிர் தப்பிய இவர், நேற்று தினகரன் ஆசிரியர் பீடத்துக்கு வந்திருந்தார். அவர் கூறியவற்றை இங்கே தருகிறோம்; 28 வயதான குணசிங்கம் விசாகன் நல்ல உடற்கட்டுடன் இருக்கும் ஒரு துடிப்பான இளைஞன்.

எனினும் இந்த பயங்கரவாத யுத்தம் செய்த கோர விளைவினால் இவர் தனது வலது கையின் முழங் கைக்கு மேற்பகுதியை இழந்துள்ளார். இவரது இடது கையின் மூட்டுச் சிரட்டையும் நொருங்கியிருப்பதனால் அவருக்கு இடது கையையும் சரியாக இயக்க முடியாது துன்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்.

இவரது பிறப்பிடம் யாழ்ப்பாணமாக இருந்தாலும் இவர் கிளிநொச்சிக்கு 1995ம் ஆண்டு இடம்பெயர்ந்து 2000ம் ஆண்டில் எனது உறவினரின் காணியில் தோட்டம் செய்து கொண்டிருந்தேன். எனக்கு அக்காலப்பகுதியில் ஷெல் ஒன்று விழுந்தமையினால் தனக்கு பெரும் காயங்கள் ஏற்பட்டதாக கூறினார்.

ஒருவிதத்தில் நான் இவ்விதம் ஷெல் தாக்குதலினால் காயமடைந்து ஊனமடைந்தது நல்லதென்றே நினைக்கிறேன் என்று கூறிய அவர், நான் மட்டும் காயப்படாதிருந்தால் என்னையும் எல்.ரீ.ரீ.ஈயினர் பலவந்தமாக தங்கள் போராளியாக சேர்த்து பலிக்கெடாவாக்கியிருப்பார்கள். இவ்விதம் நூற்றுக்கணக்கான அப்பாவி இளைஞர்கள் எல்.ரி.ரி.ஈயின் இந்த பொறுப்பற்ற கண்மூடித்தனமான நடவடிக்கையினால் உயிர்த்தியாகம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவ்விதம் துன்பத்தில் ஆழ்ந்திருந்த எனக்கு அப்போது வயது 19. நான் ஊனமுற்று தனித்து வாழ முடியாதிருந்த போது என்னை சந்தித்த ஒரு பெண் என்னை மணம் முடித்து கணவனாக ஏற்றுக்கொண்டு எனக்கு வாழ்வளிக்கும் தியாகத்தைச் செய்தாரென்று கூறிய இந்த இளைஞன் தற்போது இரட்டை குழந்தைகளுடன் எல்லாமாக தனக்கு 4 ஆண் பிள்ளைகள் இருப்பதாகவும் ஒரு கையை இழந்த எனக்கு ஆண்டவன் 8 கைகளை கொடுத்திருக்கிறார் என்றார்.

இன்று மகிழ்ச்சியோடு வாழ்ந்து கொண்டிருக்கிற எனக்கு ஜனாதிபதி அவர்களும், அரசாங்கமும் உதவ வேண்டுமென்று கேட்டுக் கொண்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]