ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
புதிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது சீனா

புதிய ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது சீனா

சீனா, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும் புதிய ஏவுகணை ஒன்றை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தி பரிசோதித்துள்ளது.

சீனாவின் ஷென்யாங் இராணுவ மண்டலத்தில் உள்ள பாதுகாப்பு பிரிவில் இருந்து “ஹோங்கி 16” அல்லது “ரெட் ப்ளாக் 16” என்ற ஏவுகணை, விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இந்த ஏவுகணை, தரையில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கும்.

அதோடு, விண்ணில் மிக அதிக உயரத் தில் உள்ள மற்றும் மிகக் குறைவான உயரத்தில் உள்ள இலக்கு களையும் தாக்கும் திறன் படைத்தது. சமீபத்தில் தான், இதே ரக ஏவுகணைகள் இரண்டை சீனா வெற்றிகரமாக பரிசோதித்தது என்பது குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]