ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER,30, 2011

Print

 
பைசல் பள்ளிவாசல் பாகிஸ்தான்

பைசல் பள்ளிவாசல் பாகிஸ்தான்

பைசல் பள்ளிவாசல் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் அமைந்துள்ளது. பாகிஸ்தானின் தேசிய பள்ளிவாசலான இது தெற்காசியாவிலேயே மிகப்பெரிய பள்ளிவாசலாகும்.

முன்னாள் சவூதி அரேபிய மன்னர் பைஸல் பின் அப்துல் அkஸின் நிதி உதவியில் அமைக்கப்பட்டதால் இப்பள்ளிவாசலுக்கு அவரது பெயரே சூட்டப்பட்டது.

இந்த பள்ளிவாசலுக்கான கட்டட வடிவமைப்பை சர்வதேச அளவில் நடத்தப்பட்ட போட்டி ஒன்றின் மூலமே தெரிவு செய்யப்பட்டது. இதில் 17 நாடுகளில் இருந்து 43 கட்டட வடிவங்கள் பரிந்துரைக்கப்பட்டன. இறுதியில் துருக்கியின் கட்டடக் கலைஞர் வெடாட் தலுகாவின் வடிவம் பயன்படுத்தப்பட்டது.

இந்த கட்டட வடிவம் சம்பிரதாயமான இஸ்லாமிய கட்டடக் கலையில் இருந்து மாறுபட்டிருந்ததால் விமர்சனங்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது. 1986 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்ட இப்பள்ளிவாசலுக்கு சுமார் 120 மில்லியன் டொலர் அளவில் செலவானது.

இந்த பள்ளி வாசலில் ஒட்டு மொத்தமாக ஒரே நேரத்தில் 2 இலட்சம் பேர் அளவில் தொழுகை நடத்த முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]