ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 

பசுவை கொன்றால் ஏழு ஆண்டு சிறை

பசுவை கொன்றால் ஏழு ஆண்டு சிறை

பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை அளிக்கும் வகையில் பசு வதை தடை சட்டத்தில் குஜராத் அரசு திருத்தம் கொண்டு வந்துள்ளது. இதற்கான மசோதா, சட்ட சபையில் நேற்று முன்தினம் எந்த எதிர்ப்பும் இன்றி நிறைவேற்றப்பட்டது. குஜராத்தில் பசுவதை தடை சட்டம் அமுலில் உள் ளது. இதன்படி, பசுவை கொல்பவர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும் ரூ. 1000 அபராதமும் விதிக்கப்பட்டு வந்தது.

இந்த சட்டம் எதிர்பார்த்த பலனை அளிக்காததை தொடர்ந்து தண்டனை காலத்தை உயர்த்த மாநில அரசு முடிவு செய்தது. அதற்கு ஏதுவாக குஜராத் கால்நடை பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திருத்த சட்டமூலம், நேற்று முன்தினம் சட்ட சபையில் தாக்கல் செய்யப்பட்டது. முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரசும் மசோதாவுக்கு ஆதரவு அளித்தது. இதனால், எந்த எதிர்ப்பும் இன்றி சட்டமூலம் ஒருமனதாக நிறைவேற்றப் பட்டது. ஆளுநர் ஒப்புதலுக்கு பிறகு இந்த சட்டம் நடைமுறைக்கு வரும். புதிய சட்டப்படி, பசுவை கொல்பவர்களுக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும் ரூ. 50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி