ஹிஜ்ரி வருடம் 1432 துல்கஃதா பிறை 02
கர வருடம் புரட்டாதி மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, SEPTEMBER 30, 2011
வரு. 79 இல. 231
 
முட்டை பொரித்து வெளிவரும் முன்....

 

முட்டை பொரித்து வெளிவரும் முன்....

'முட்டை பொரிந்து வெளிவரும் முன் குஞ்சுகளை எண்ணாதே' (Don't count your chickens before they hatch)  என்பது ஆங்கிலத்தில் பிரபலமான வழக்கு. ஒரு விடயம் உண்மையாக முடியும் முன் ஒரு முடிவுக்கு வரக்கூடாது என்பது இதன் பொருள்.

கி. மு. ஆறாம் நூற்றாண்டில் தான் இது இவ்வாக்கியம் முதன் முதலில் எழுதப்பட்டது. ஈசாப் கதைகளில் ஒன் றான "பால்காரியும் அவளுடைய வாளியும்" என்ற கதையில் இருந்து எடுக்கப்பட்ட மேற்கோள்.

ஈசாப் அடிமையாகத் தனது வாழ்க் கையைத் தொடங்கினார். தன்னுடைய அறிவுக் கூர்மை, சாமர்த்தியம் ஆகியவற் றால் அவர் விடுதலை அடைந்தார். உலகப் புகழும் பெற்றார். எனவே அவ ரது வாழ்க்கையே இச்சொற்றொடருக்குச் சரியான விளக்கமாக அமைகிறது.

இந்த வாக்கியம் ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டது 16 ஆம் நூற்றாண்டில்தான்.

உண்மையைக் கறக்கும் காந்தம்!

காந்தத்தின் மூலம் ஒருவரிடம் இருந்து உண்மையைக் கறக்க முடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். இதன் மூலம், குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட ஆனால் வாய் திறக்க மறுக்கிற நபர்களிடம் இருந்து உண்மையை வரவழைத்துவிட முடியும் என்று நம்புகிறார்கள்.

இது தொடர்பான ஆய்வை மேற் கொண்ட எஸ்தோனிய ஆய்வாளர்கள், காந்தத்தால் மூளையின் முன்பகுதியைத் தூண்ட முடியும். ஒருவர் பொய் சொல் வதை தடுக்க முடியும் என்கிறார்கள்.

நெற்றிக்கு நேரே பின்புறம் உள்ள "டார்சோலேட்ரல் பிரிபிராண்டல் கார் டெக்ஸ்" என்ற மூளைப் பகுதியை காந்தத்தால் தூண்டுவதன் மூலம் ஒருவரை உண்மை சொல்லவோ, பொய் பேசவோ வைக்க முடியும் என்கிறார்கள். இப் பகுதியின் இடது பக்கம் அல்லது வலது பக்கம் என்று எதைத் தூண்டுகிறோம் என்பதைப் பொறுத்தது அது.

ஆனால் மூளையில் பரீட்டல் லோப் பகுதியில் காந்தத்தால் தூண்டுவது, குறிப்பிட்ட மனிதர் முடிவெடுப்பதில் எவ்விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை என்றும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நேர்மை, நீதிநெறி குறித்த ஒருவரின் சிந்தனையை சக்தி வாய்ந்த காந்தத்தால் மாற்ற முடியும் என்பது வியப்பு அளிப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

நிச்சயதார்த்த மோதிரம்!

வெனிஸ் நகர வாசிகள் 16 ஆம் நூற்றாண்டில் வைரத்தின் மதிப்பை உணர்ந்த பிறகு, நிச்சயதார்த்தத்தின் போது வைர மோதிரம் போடுவதை அறிமுகப்படுத்தினர். கி. பி. 860 வரையில் நிச்சயதார்த்தப் பரிசுகளில் மோதிரம் இடம்பெற்றிருக்கவில்லை.

திருமணம் செய்ய விரும்புபவர் அதை உறுதி செய்து கொள்ள விலை உயர்ந்த மோதிரத்தைக் கொடுக்க வேண்டும் என்று அந்த ஆண்டில் போப் நிக்கோலஸ் ஓர் ஆணையை வெளியிட்டார்.

தவிர, மணமகன் திருமணத்தை ரத்து செய்தால் அவளை நம்பி மோசம் போன மணப் பெண் அந்த மோதிரத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு பெண் துறவிகள் மடத்துக்குச் செல்ல வேண்டும் என்றும், போப் நிக்கோலஸ் ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'ஈவ்ஸ் டிரப்பிங்' ஒட்டுக் கேட்பது

eaves dropping  என்று குறிப்பிடப் படுகிறது. இடைக்கால வீடுகளில், கூரையில் இருந்து மழை நீரை எடுத்துச் செல்ல குழாய்கள் இருக்காது. அதற்குப் பதிலாக eaves என்பவை இருக்கும்.

அவை சரிவான கூரையின் கீழாக அகலமாக நீட்டப்பட்டிருக்கும் அவற்றின் முனைகள், கூரையில் இருந்து வழியும் மழைநீரில் இருந்து மண் சுவர்களைப் பாதுகாக்கும். திடீரென்று மழை பெய்யும் போது யாராவது இந்த 'ஈவுக்கு' அடியில் ஒதுங்கினால், உள்ளே இருப்பவர்கள் பேசுவதைக் கேட்க முடியும் அப்படித்தான் மேற்கண்ட வார்த்தை பிறந்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி