ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 29
கர வருடம் ஆடி மாதம் 16ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, AUGUST,01, 2011

Print

 
நாகரிகம் வளர்ச்சியடைகின்ற போதிலும் பாரம்பரியத்தை கைவிட ஆதிவாசிகள் தயாரில்லை

நாகரிகம் வளர்ச்சியடைகின்ற போதிலும் பாரம்பரியத்தை கைவிட ஆதிவாசிகள் தயாரில்லை

ஆயினும் காலப் போக்கில் காடுகளின் அளவு நாகரீகம் என்ற பெயரில் குறைவடைய ஆரம்பித்தை அடுத்து வேடுவ சமூகத்தினர் கிராமத்து மக்களைப் போன்று தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார்கள். அவர்கள் மரங்களையும், மரக்குற்றிகளையும், பலகைகள், களிமண் போன்றவற்றைப் பயன்படுத்தி சிறு வீடுகளை அமைத்துக் கொண்டார்கள். இலுக் மற்றும் மனா என்ற புல் இனத்தைப் பயன்படுத்தி இவர்கள் அந்த வீடுகளின் கூரைகளை அமைத்தார்கள். இவர்கள் முதலில் ஒரு துண்டு வீட்டில் இருந்து வீட்டின் அளவை இரட்டிப்பு செய்தார்கள்.

கடல் வேடுவர்களின் பழைய வீடுகள் குட்டையாக தென்னம் ஓலைகளினாலும் காட்டு புல்லினாலும் அமைக்கப்பட்டிருந்தன. பண்டைய மனிதர்கள் வேடுவர்களின் வீடுகள் சிறிதாக இருந்தாலும் அவை வேடுவர்களுக்கு சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பை அளித்ததாக கூறுகிறார்கள்.

அந்த வீடுகளில் ஒரு சில சமையல் பாத்திரங்களும், ஒரு பாயும், மீன் பிடிப்பதற்கான சில வலை மற்றும் தூண்டில் மாத்திரமே இருந்தன. அவர்கள் தங்கள் வீடுகளை அடுத்துள்ள களைகளை அகற்றிவிட்டு சோளம், மஞ்சள் பூசணிக்காய் போன்ற காய்கறிகளை செய்கை பண்ணினார்கள். இவை இலகுவில் வளரக்கூடிய காய்கறிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

வேட்டையாடுதல்

கடந்த காலத்தில் வேடுவர்கள் முழுமையாக வேட்டையாடும் தொழிலையே நம்பியிருந்தார்கள். அதே வேளையில் வேடுவர்களில் ஒருசாரார் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டுமென்ற நல் உணர்வுடன் செயற்படவும் தவறவில்லை. இவர்கள் வேட்டைத் தொழிலின் போது சாதாரண ஆயுதங்களைப் பயன்படுத்தியே உணவுக்காக மிருகங்களை வேட்டையாடினார்கள்.

வேடுவர்கள் அன்று நோய்வாய்ப் பட்டு, காயமடைந்த, வயிற்றில் குட்டிகளை வைத்திருக்கும் மிரு கங்களை வேட்டையாடுவதே இல்லை. தண்ணீர் குடிக்கும் மிரு கங்களையோ அல்லது குட்டிகளுக்கு பாலூட்டும் மிருகங்களையோ அவர்கள் கொல்வதில்லை.

ஒரு மிருகத்தை வேட்டையாடியவுடன் அவர்கள் அதன் இறைச்சியில் ஒரு பகுதியை தங்களின் உறவுக்காரர்களின் ஆவிகளுக்கு நன்றிக்கடனாக ஒரு பலி பூசையின் மூலம் செலுத்து வார்கள். அந்தப் பலி பூசைகளை அங்குருமாலு, வெலி மாலு, அபரமாலு என்று அதன் உணவுக்கு பெயர் சூட்டி வழிபடுவார்கள்.

அதற்குப் பின்னர் அந்த இறைச்சியை அவர்கள் பங்கு போட்டுக்கொள் வார்கள். 1ஜமானரின் பங்கு, வைத்தியரின் பங்கு, தலைவரின் பங்கு என்று பங்கிட்ட பின்னர் அதனை கிராமத்திற்கு எடுத்து வந்து தங்கள் குடும்பத்தவர்களுடனும் தங்கள் குலத்தைச் சேர்ந்தவர்களுடனும் பங்கு போட்டு உண்பார்கள். வேட்டையாடிய இறைச்சியை தேனில் தொட்டு உண்பது வேடர்கள் மிகவும் விரும்பும் உணவாகும்.

கிழக்கிலுள்ள வேடுவர்கள் வேட்டையாடுவதில் வல்லவர்கள். இவர்கள் தங்கள் மாண்டு போன உறவினர்களின் ஆவிகளுக்கு உணவை சன்மானமாகக்கொடுத்து அந்த ஆவிகளின் உதவியுடன் மீனை பெருமளவில் பிடிப்பார்கள். இந்த மீன்களுக்கும் அங்குருமாலு, வெலிமாலு, அபரமாலு என்று வெவ்வேறு பெயர் சூட்டப்படுகின்றது.

வேடுவர்கள் மீன்பிடித் தொழிலில் சிறப்புற்று விளங்குவதற்கு நல்ல கடினமான மீன்பிடி வலைகளை தயாரிப்பதிலும் அதனை மிகவும் சூட்சுமமாக கையாள்வதிலும் திறமையானவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அம்பையும், வில்லையும் பயன்படுத்துவதும் உண்டு. வேட்டையாடுவதற்கு மட்டுமன்றி மீனைப் பிடிப்பதற்கும் வில்லை பயன்படுத்துவதுண்டு.

காட்டு மிருகங்களை வேட்டையாடுவதுடன் குளங்களில் உள்ள நன்னீர் மீன் இனங்களையும் இவர்கள் பிடித்துப் உண்பார்கள். இவர்கள் நச்சுத்தன்மையுடைய தாவரங்களை குளங்களில் போட்டு அதனால் மயக்கமடையும் மீன்களை இலகுவில் பிடிப்பதுண்டு. கிழக்கு மாகாணத்தில் உள்ள வேடுவர்களும் வேட்டையாடும் தொழிலுடன் தொழிலுக்கு மேலதிகமாக வாழ்வாதாரமாக இருந்தது. கடலேரியிலும், ஆழம் குறைவான கடலிலும் மீன் பிடிக்கும் தொழிலாகும்.

‘மண்டவா’ என்ற ஒரு ஆயுதத்தை பயன்படுத்தி மீனை அடித்துக் கொல்லும் சம்பிரதாய முறையும் இவர்களால் கடைப்பிடிக்கப்படுகிறது. அம்பை சரியாக குறிபார்த்து மீனை தாக்கக் கூடிய திறமை மிக்கவர்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். கடல் வேடுவர்கள் மீன் பிடிப்பதுடன் மான், பன்றி மற்றும் பாம்பினங்களையும் பிடித்து உணவாக எடுக்கிறார்கள்.

இவர்கள் பலதரப்பட்ட கைத்தொழில்களை வெவ்வேறு இடங்களில் கையாண்டார்கள். தேனியினால் பெறப்படும் தேன்பாணி, குளவிகளால் பெறப்படும் தேன்பாணி ஆகியன சிறந்த போஷாக்குணவாக கருதப்படுகிறது.

இந்த தேன் பாணியை பயன்படுத்தி மிருகங்களின் இறைச்சியையும் பழ வர்க்கங்களையும் பழுதடையாதவாறு பல நாட்களுக்கு பதனிட்டு வைக்க முடியும். காடுகளில் உள்ள மருந்து மூலிகைகளை சேகரித்து, பாரம்பரிய மருந்து வகைகளை தயாரித்தல், கைப்பணிப் பொருட்கள், மிருகங்களின் எலும்புகள், கற்கள் மற்றும் மரங்களின் இலை, குழைகளை பயன்படுத்தி பொருட்களை தயாரிப்பது வேடுவ சமூகத்தின் முக்கிய வாழ்வாதாரமாகவும் இருந்து வருகின்றது. கிழக்கிலுள்ள வேடுவர்கள் மீன்பிடி, விவசாயம், குளவிகளின் தேன் பாணியை சேகரித்தல் போன்ற பலதரப்பட்ட தொழில்களில் ஈடுபடுகிறார்கள்.

இலங்கையில் வேடுவ சமூகங்களின் வியாபித்தல்

இவர்கள் ஆரம்ப காலத்தில் காடுகளில் உணவை தேடியலையும் மனிதர்களாக விளங்கினார்கள். கடந்த 50 ஆண்டு காலத்தில் வேடுவர்களின் வாழ்க்கை மாறிவிட்டது. இவர்களை காடுகளில் இருந்து வெளியேற்றி கிராமங்களில் குடியமர்த்தியதும் பிரதான காரணமாகும். அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறை தவிடு பொடியாவதற்கும் இதுவொரு முக்கிய காரணியாகும். இதனால் அவர்களின் பாரம்பரியமான வாழ்க்கை முறை பெரும் பாதிப்பிற்குள்ளாகியது.

கிராமங்களில் குடியமர்த்தப்பட்ட இவர்கள் பாரம்பரியமாக வேட்டை யாடி உணவைத் தேடும் வாழ் வாதாரத்தை இழந்து, அவர்கள் சமூகத்தின் ஏனையோருடன் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டிய ஒரு பெரும் சவாலையும் எதிர்நோக்கினார் கள். இந்த நிலை இலங்கையின் உள்நாட்டில் உள்ள வேடுவர்களையும், கரையோத்தில் உள்ள வேடுவர்களையும் பெரிதும் பாதித்தது. சிங்கள மற்றும் தமிழ் பாரம்பரிய கலாசாரத்தின் செல்வாக்கும் இந்த ஆதிக்குடிகளின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுவதற்கு ஒரு வலுவான செல்வாக்காக மாறியது.

பண்டைய காலம் முதல் வேடுவ சமூகத்தைப் பற்றி பல்வேறு பதிவேடுகள் இருக்கின்றன. மகா வம்சத்தில் வேடுவர்கள் பற்றிய பல முக்கிய தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவர்கள் பற்றி பண்டைய மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் கிடைக்கப்பெற்ற தகவல்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள் ளது. ‘டிமொரிபஸ், பிராமநோரும்’ என்ற நூலை பாலடியாஸ் என்பவர் எழுதியிருக்கிறார். வெளிநாட்டவரான இவர் கிறிஸ்துவுக்குப் பின்னர் 400 ஆம் ஆண்டு தசாப்தத்தில் வாழ்ந்த வேடுவர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

பாலடியாஸ் மற்றும் ரொபட் நொக்ஸ் வேடுவர்களைப் பற்றி அதிக தகவல்களை வரலாற்று நூல்களில் பதித்துள்ளார்கள். இலங்கை பிரிட்டிஷ் குடியேற்ற நாடாக மாறிய பின்னர் வேடுவர் சமூகத்தைப் பற்றிய பண்டைய தகவல்களை ஆய்வு செய்வதில் பலர் ஆர்வத்துடன் ஈடுபட்டார்கள். இவற்றில் ‘எமேசன் டெனன், ஜோன் டேவி, ஹியு நெவில்ஸ் ஆகிய வரலாற்று பதிவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வெளிநாடுகளில் இருந்து இங்கு வந்த வேறு பலரும் வேடுவர்களை பற்றி பல முக்கிய தகவல்களை இங்கு பதிவு செய்துள்ளார்கள். அவர்களில் சராசின்ஸ், செயின் செட் ஒப் செய்லான் என்ற வரலாற்று நூல் 1893 ஆம் ஆண்டே டாக்டர் சாள்ஸ் கெப்ரியஸ்செலிக்மன்ட் இதனை எழுதியிருக்கிறார். 2011ல் ஆர். எல். ஸ்பிட்டர், டாக்டர் நந்ததேவ விஜேசேகர, யுவராஜ் தங்கராஜா மற்றும் நுவன் கங்கந்த ஆகியோரும் வேடுவ சமூகத்தைப் பற்றி ஆய்வுகளை நடத்தி கட்டுரைகளை எழுதியுள்ளார்கள்.

இலங்கையின் ஆதிவாசிகளின் மத்தியில் வாரிக சபா என்ற அமைப்பும் இருந்து வருகின்றது.

வேடுவ குழுக்கள் வேட்டையாடும் தொழிலையும் காட்டு வாழ்க்கையையும் உணவை சேமிக்கும் வாழ்வாதாரத்தை கடைப்பிடித்து வந்த போதிலும், அவர்கள் தங்கள் சமூகம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை ஒன்றிணைந்து கூடி ஆராய்ந்து அவற்றை தீர்ப்பதற்கான பொதுவான தீர்மானத்தை எடுப்பார்கள். இது அவர்களின் பாரம்பரிய வாழ்க்கை முறையாகும்.

இது போன்று இப்போது இலங்கையில் உள்ள வேடுவர் சமூகத்தினர் வருடம் ஒரு தடவை ஒன்றிணைந்து தங்கள் தலைவர் ஊரு குலத்தைச் சேர்ந்த வன்னிலா அத்தோ தலைமையில் வாரிக சபா கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வார்கள். கடந்த பல ஆண்டுகளாக இந்த ஒன்றுகூடல் தம்பானையில் நடைபெற்றது.

வாரிக சபாவை இந்தத் தடவையில் வாகரையில் நடத்துவதற்கான காரணம்

தற்போது கிடைத்துள்ள தகவல் களின்படி இலங்கையில் உள்ள ஆதி வாசிகளின் பெருமளவு எண்ணிக் கையினர் இன்று கிழக்கு மாகாணத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கடந்த 30 ஆண்டு கால பயங்கர வாதத்தின் போது எல். ரி. ரி. ஈ. கடல் வேடுவர் சமூகத்தை தனது யுத்தத்திற்காக பயன்படுத்தியது. இந்த உண்மையை மற்ற சமூகத்தவர்கள் அறியாதிருக்கிறார்கள்.

இன்று கடல் வேடுவர் சமூகம் பெரும் அச்சுறுத்தலை 1திர்நோக்கியிருக்கிறது. அவர்கள் சமூக, பொருளாதார ரீதியிலும் மத அடிப்படையிலும் மற்றவர்களுடன் ஒன்றிணைந்து செயற்பட தயங்குவதே இதற்கான காரணமாகும். இதனால் தான் இந்தத் தடவை வாரிக சபாவை வாகரையில் நடத்தி கடல் வேடுவர் சமூகத்தை வெளியிலுள்ள சமூகத்த வர்களுக்கு அறிமுகம் செய்வதற்கான இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]