ஹிஜ்ரி வருடம் 1432 ஷஃபான் பிறை 04
கர வருடம் ஆனி மாதம் 22ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, JULY,07, 2011

Print

 
எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடியாக அதிகரிப்பு

எம்.பி.க்களுக்கு ஒதுக்கப்படும் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடியாக அதிகரிப்பு

எம்.பி.க்களுக்கான தொகுதி மேம்பாட்டு நிதி ஆண்டுக்கு 2 கோடியில் இருந்து 5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை நேற்றுமுன்தினம் ஒப்புதல் அளித்தது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர்களின் தொகுதியில் வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வதற்காக ஆண்டுதோறும் தலா 2 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் தங்கள் சொந்த தொகுதியில் பள்ளிகள், தண்ணீர் வசதிகள், சுகாதார திட்டங்களை மேற்கொள்ள எம்.பி.க்கள் அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்யலாம். இந்த நிதியை அதிகரிக்க வேண்டும் என எம்.பி.க்கள் மத்திய அரசை வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்றுமுன்தினம் அமைச்சரவை கூட்டம் நடந்தது, அதில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது, இதில் எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியை 2 கோடியில் இருந்து 5 கோடியாக அதிகரிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்ததாக மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனியா தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதி 5 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதால் மத்திய அரசுக்கு கூடுதலாக ஆண்டுக்கு 2,370 கோடி செலவாகும் அதன்படி ஆண்டுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி 1,580 கோடியில் இருந்து 3,950 கோடியாக அதிகரிக்கும் இந்த நிதி அதிகரிப்பு ஏப்ரலில் இருந்து அமுலுக்கு வரும். எம்.பி.க்கள் தொகுதி மேம்பாட்டு நிதியால் மக்களுக்கு தேவையான வசதிகளை இன்னும் சிறப்பாக செய்து முடிக்க முடியும் என்றார். நிதி அதிகரிப்பு அவசியமா? என்று நிருபர்கள் கேட்டதற்கு விலைவாசி உயர்வு அதிகரித்துவிட்டது. இதனால் பல திட்டங்கள் முடிவ    டையாமல் நிற்கின்றன. எனவே எம்.பிக்கள் தொகுதி மேம்பாட்டு நிதி அதிகரிப்பு சரியானதுதான் என்று அம்பிகா சோனியா பதில் அளித்தார். நிதி அதிகரிப்பதால் ஊழல் நடப்பதை தடுக்க முடியுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு திட்டங்கள் முடியும் வரை கண்காணிக்க எம்.பி.க்கள் உறுதி அளித்துள்ளனர். அத்துடன் தகவல் அறியும் உரிமை சட்டம் உட்பட பல்வேறு காண்காணிப்பு அமைப்புகள் உள்ளன அதனால் ஊழல் நடப்பதை தடுக்க முடியும் என்று அம்பிகா சோனி கூறினார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]