ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE,21, 2011

Print

 
ஒசாமா ஆதரவாளர்களை பிடிக்கும் முயற்சியில் 30 பேர் கைது

ஒசாமா ஆதரவாளர்களை பிடிக்கும் முயற்சியில் 30 பேர் கைது

பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் ஆதரவாளர்களை கண்டுபிடிக்கும் முயற்சியாக இதுவரை 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இத்தகவலை அமெரிக்காவுக்கான பாகிஸ்தானிய தூதர் ஹுசைன் ஹக்கானி கூறியுள்ளார். அமெரிக்காவின் பிரபல செய்தி இணையதளம் ஒன்றில் அவர் எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

“பின்லேடனுக்கு உதவிய நபர்கள் பற்றி அடையாளம் காண்பதற்காக இதுவரை 30க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் நாட்டுக்காக உளவு பார்த்த ஜோனதன் பொலார்ட் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்று தனது கட்டுரையில் ஹக்கானி குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், பின் லேடன் அமெரிக்காவுக்கும் பாகிஸ்தானுக்கும் பொது எதிரி. அவர் பாகிஸ்தானில் இருந்ததற்கு நாங்கள் பொறுப்பல்ல. பாகிஸ்தானை நம்பலாமா என்று அமெரிக்காவில் கேள்வி எழுப்பப்படுகிறது.

அதேபோல், அமெரிக்காவை நம்பலாமா என்று பாகிஸ்தானியர்கள் கேட்கின்றனர். தீவிரவாதத்தால் பாகிஸ்தானுக்கு மிகப்பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]