ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE 21, 2011
வரு. 79 இல. 145
 

ஒரு இலட்சம் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் படுகொலை

காஷ்மீரில் மட்டும்

ஒரு இலட்சம் அப்பாவி மக்கள் தீவிரவாதிகளால் படுகொலை

ஜம்முகாஷ்மீர் மாநிலத்தில் கடந்த 20 ஆண்டுகளில் சுமார் ஒரு இலட்சம் மக்கள் தீவிரவாதிகளால் கொல்லப் பட்டுள்ளதாகவும். மேலும் சுமார் 10 ஆயிரம் பேர் காணாமல் போயுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.

காஷ்மீர் மாநிலம் தினந்தோறும் தீவிரவாத செயல்களினால் சிக்கி திணறிவருகிறது. மாநில பொலிஸாரும், இந்திய இராணுவத்தினரும் இணைந்து தீவிரவாதிகளின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தினாலும் அவை புற்றுநோய் போல் மீண்டும் மீண்டும் துளிர்விடுகின்றன.

கடந்த 1990ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2011 ஏப்ரல் வரையிலான காலகட்டங்களில் 43 ஆயிரத்து 460 பொதுமக்கள் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பாதுகாப்பு படையினரால் சுமார் 3 ஆயிரத்து 642 பேர் பொதுமக்களும் 5 ஆயிரத்து 360 பொலிஸ்காரர்கள் தீவிரவாதிகளாலும், பாதுகாப்பு படை வீரர்களால் சுமார் 21 ஆயிரத்து 323 வெளிநாட்டு தீவிரவாதிகள் மற்றும் மாநில தீவிரவாதிகள் கொல்லப் பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று தெரியவருகிறது. அதேசமயம் பொதுமக்கள் அதிகளவில் கொல்லப் பட்டுள்ளனர் என்பதற்கு மாநில அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி