ஹிஜ்ரி வருடம் 1432 ரஜப் பிறை 18
கர வருடம் ஆனி மாதம் 06ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, JUNE,21, 2011

Print

 
நடிகை ஸ்வேதா மேனன் திருமணம்

நடிகை ஸ்வேதா மேனன் திருமணம்

பிரபல திரைப்பட நடிகை ஸ்வேதா மேனன் - ஸ்ரீவத்சன் மேனன் காதல் திருமணம், திருச்சூர் வளாஞ்சேரியில் இன்று (சனிக்கிழமை) நடந்தது. திரையுலகப் பிரமுகர்கள், நண்பர்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

மலையாளம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் சுவேதா மேனன். இவரது சொந்த ஊர் கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் வளாஞ்சேரி ஆகும். இவர் நடித்த ரதி நிர்வேதம் என்ற புதிய மலையாள திரைப்படம் கேரளாவில் சக்கைய போடு போடுகிறது.

தற்போது மும்பையில் வசித்து வரும் இவருக்கும், மும்பையில் ஒரு வார இதழில் பத்திரிகை ஆசிரியராக பணியாற்றி வரும் ஸ்ரீவத்சன் மேனனுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]