ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
பாக். பிரதமரை கொல்வதற்கு சதி; ஏழு பேர் பொலிஸாரால் கைது

பாக். பிரதமரை கொல்வதற்கு சதி;
ஏழு பேர் பொலிஸாரால் கைது

பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானியைக் கொல்ல முயன்றதாக 7 பேரை பாகிஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு தீவிரவாதியிடமிருந்து தங்களுக்கு இது தொடர்பாக உத்தரவு வந்ததாகவும் அதை நிறைவேற்றத் திட்டமிட்டு வந்ததாகவும் கைதானவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து பாகிஸ்தான் பொலிஸ் அதிகாரி பாபர் பக்த் குரேஷி கூறுகையில், கிலானியின் முல்தான் இல்லத்தில் தாக்குதல் நடத்தி அவரைக் கொல்ல இவர்கள் திட்டமிட்டிருந்தனர் என்றார்.

பஞ்சாப் மாநிலம் முல்தான் நகரில் கிலானியின் வீடு உள்ளது. இங்குதான் தாக்குதல் நடத்தத் திட்டமிடப்பட்டதாக குரேஷி கூறியுள்ளார். தலைநகர் முல்தான் இஸ்லாமாபாத்திலிருந்து 395 கிலோ மீட்டர் தொலைவில் முல்தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த இவர்கள் திட்டமிட்டிருந்தனர். இதற்காக பெருமளவிலான வெடிபொருட்களையும் அவர்கள் வைத்திருந்தனர்.

மேலும் கைதானவர்களிடமிருந்து ஒரு கிலோ தங்கம், இரண்டரை கிலோ வெள்ளியையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.

இவர்களுக்கு தலிபான் அமைப்பிலிருந்து பிரிந்து வந்து தனி அமைப்பை நடத்தி வரும் ‘கரி இம்ராம்’ என்பவர்தான் கிலானியைக் கொல்லுமாறு உத்தரவிட்டதாக தெரிய வந்துள்ளது.