வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

அமெரிக்க பென்டகன் மீது துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

அமெரிக்க பென்டகன் மீது
துப்பாக்கிச் சூடு - இருவர் காயம்

அமெரிக்க இராணுவ தலைமையகமான பென்டகன் மீது மர்மநபர் ஒருவர் தீடீர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமெரிக்காவின் இராணுவ தலைமையகமான பென்டகனின் தெற்கு பிளாக் பகுதியை நோக்கி மாலை வேளையில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கித் தாக்குதல் நடத்தினார்.

இதனால், அதிர்ச்சியடைந்த பென்டகன் பாதுகாப்புப்படை ஏஜென்சியினர் பதில் தாக்குதலுக்கு தயார் ஆயினர்.

சுமார் 45 நிமிடம் நீடித்த இந்த துப்பாக்கிச்சண்டையில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் காயமடைந்தனர். உயிர்ச்சேதம் ஏற்படவில்லை.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இது குறித்து பென்டகன் பாதுகாப்புப்படை முகரமைப்பின் பணிப்பாளர் ஸ்டீவன் கிளாவரி கூறுகையில்:

பென்டகனின் தெற்கு பகுதியானது பொதுமக்கள், பாதசாரிகள் வந்து போகும் பகுதியாகும். அவர்களில் யாரேனும் ஒருவர் தான் இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும். தற்போது தெற்கு கட்டடப்பகுதி மூடப்பட்டுள்ளது என்றார்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»