வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

மியான்மார் தேர்தலில் இராணுவ ஆதரவு கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு

மியான்மார் தேர்தலில் இராணுவ ஆதரவு கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு

மியான்மர் தேர்தலில் இராணுவ ஆதரவுடன் செயல்படும் கட்சிகளே வெற்றி பெறும் நிலை ஏற்பட்டுள்ளது. மற்ற எதிர்க்கட்சிகளுக்கு கடும் நெருக்கடி கொடுக்கப்படுவதால், அவர்கள் தேர்தலில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டள்ளது.

மியான்மரில் இராணுவ ஆட்சி நடக்கிறது. கடைசியாக அங்கு 1990ல் தேர்தல் நடந்தது. இதில் ஆங் சாங் சூகியின் ஜனநாயகத்துக்கான தேசிய லீக் கட்சி வெற்றி பெற்றது. இருப்பினும், இராணுவ ஆட்சியாளர்கள் ஆங் சாங் சூகி பதவியேற் பதை அனுமதிக்கவில்லை. தற்போது சூகி, வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், பல்வேறு நாடுகள் மற்றும் ஐ.நா, ஆகியவை கொடுத்த நெருக்கடி காரணமாக அடுத்த மாதம் 7ம் திகதி தேர்தல் நடத்தப்படும் என மியான்மர் அரசு அறிவித்தது.

இந்த தேர்தல் நேர்மையாக நடக்காது எனக் கூறி, சூகி கட்சியினர் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தனர். இருந்தாலும், அவரது கட்சியைச் சேர்ந்த ஒரு சிலர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேலும் தேசிய ஒற்றுமை மற்றும் மேம்பாட்டு கட்சி (யு.எஸ்.டி.பி,) மற்றும் தேசிய ஒற்றுமை கட்சி (என்.யு.பி), ஆகிய இரு கட்சிகளுமே பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இந்த கட்சிகளின் வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத அளவுக்கு இராணுவத்தினர் கடும் நெருக்கடி கொடுத்து வருகின்றனர்.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»