வரு. 78 இல. 248
ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER, 21, 2010

குணப்படுத்த முடியாத ‘காஷின் - பெக்’ எலும்புநோய் வேகமாகப் பரவுகிறது

குணப்படுத்த முடியாத ‘காஷின் - பெக்’
எலும்புநோய் வேகமாகப் பரவுகிறது

திபெத்தில் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் பேருக்கு ஆபத்து !

திபெத் பகுதியில் உள்ள மக்களுக்கு குணப்படுத்த முடியாத ‘காஷின்-பெக்’ என்ற எலும்பு தொடர்பான நோய் பரவி வருகிறது.

இதனால் 17,000 பேர் நோய்த் தாக்க அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளனர்.

காம்டோ பெர்பெக்சர் பகுதியில் உள்ள 11 மாவட்டங்களில் 14,662 பேருக்கு ‘காஷின் -பெக்’ நோய் இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நோயால் அதிகம் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன என்று உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் ஒரு இலட்சத்து 70 ஆயிரம் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மூட்டுகள் சிதைவடைந்து விடுகின்றன. இதனால் அவர்களால் எந்த வேலையும் செய்ய முடியாது போகின்றது. இந்த நோய்க்கான காரணம் என்னவென்று தெரியவில்லை என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இந்தப் பகுதிகளில் அதிக அளவில் சாப்பிடப்படும் பார்லியில் உள்ள பூஞ்சை தான் இந்த எலும்பு நோய் ஏற்படக் காரணம் என்று கூறுகின்றனர். குறைந்த அளவில் அயோடின் உட்கொள்ளுவது இன்னொரு காரணமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் தெரிவிக்கின்றர்.

நோய் பரவாமல் தடுக்க மக்களை வேறு இடங்களுக்கு போகுமாறு உள்ளூர் அரசு அறிவுறுத்துகிறது.


ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி


.
 
» »
» »
» »
»