ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க தலிபான்களின் பணம்

டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க தலிபான்களின் பணம்

நியூயோர்க் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட தெஹ்ரிக் இ தாலிபன் பயங்கரவாதிகள் 43 ஆயிரம் அமெரிக்க டொலர் நிதியை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க முயற்சி நடந்தது.

இந்த வழக்கில் கைதான பைசல் ஷாசத் என்பவருக்கு கடந்த மாதம் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த நியூயோர்க் டைம்ஸ் சதுக்கம் தகர்ப்பு சதியில் ஷாசத்திற்கு உடந்தையாக இருந்ததாக கருதப்படும் குற்றவாளி ஒருவர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.

அவனிடம் பாகிஸ்தான் விசாரணை நடத்திய அதிகாரிகள் விசாரணை அறிக்கையை பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

அதில் தெஹ்ரிக் இ தாலிபன் பயங்கர வாத அமைப்பின் தலைவர் ஹமிமுல்லா மெஹ்சுத்தை குற்றவாளி சந்தித்ததாகவும் டைம்ஸ் சதுக்கத்தை தகர்க்க டைசல் ஷாசத்திற்கு அந்த அமைப்பு 43 ஆயிரம் அமெரிக்க டொலர் வரை நிதி வழங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.