ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
மட்டக்களப்பில் இராணுவத்தினரின் கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்

மட்டக்களப்பில் இராணுவத்தினரின்
கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாம்

கிழக்கு மாகாண வரலாற்றில் முதன்முறை யாக முப்பதாண்டு கால யுத்தத்தின் பின்னர் மட்டக்களப்பு 234 வது இராணுவ தலைமையகம் ஏற்பாடு செய்துள்ள கூடைப்பந்தாட்ட பயிற்சி முகாமும், சுற்றுப் போட்டியும் எதிர்வரும் 22, 23ம் திகதிகளில் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரி தேசிய பாடசாலையில் நடைபெறவுள்ளன.

இப்பயிற்சி முகாமிற்கென மட்டக்களப்பு மாவட்ட ரீதியாக 150 வீரர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக 234 வது படைப்பிரிவு கட்டளைத் தளபதி பிரிகேடியர் மஹிந்த முதலிகே தெரிவித்தார்.

முதல் நாள் நிகழ்வில் இலங்கை இராணுவத்தின் கூடைப்பந்தாட்ட குழுவின் தலைவர் பிரிகேடியர் ஜனக ரத்னாயக்க பிரதம அதிதியாகவும், இரண்டாம் நாள் நிகழ்வில் கிழக்கு மாகாண இராணுவ கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் எம்.எச்.எஸ்.பி. பெரேரா பிரதம அதிதியாகவும் கலந்து கொள்ள வுள்ளனர்.

முதல் நாளான 22ம் திகதி பயிற்சி முகாம் ஆரம்ப வைபவமும், சுற்றுப் போட்டிக்கான பிரகடனமும் இடம்பெறும்.

இரண்டாம் நாளான 23ம் திகதி கூடைப்பந்தாட்ட கண்காட்சியும் சற்றுப் போட்டியின் இறுதிப் போட்டியும், பரிசளிப்பு விழாவும் இடம்பெறுமென நிகழ்ச்சி ஏற்பாட்டாளரான கப்டன் கே.ராஜபக்ஷ தெரிவித்தார்.