ஹிஜ்ரி வருடம் 1431 துல்கஃதா பிறை 12
விகிர்தி வருடம் ஐப்பசி மாதம் 04ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை!

21 வயதுக்கு உட்பட்டோருக்கு கசினோக்களில் தடை!
 

21 வயதுக்கு குறைவான இளைஞர், யுவதிகள் இரவு விடுதிகள், கசினோ நிலையங்களுக்கு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.

21 வயதுக்குட்பட்டவர்கள் இரவு விடுதிகளிலோ கசினோ நிலையங்களிலோ வேலை செய்வதும் தடை செய்யப்பட்டுள் ளதாக தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப் பாட்டுச் சபையின் தலைவர் லெய்ஷா டி சில்வா சந்திரசேன தெரிவித்தார்.

போதைப் பொருள் பாவனையிலிருந்து இளைஞர், யுவதிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல தலைமையில் கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டின் போது தெரிவித்தார். (ஐ-து)