ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 25
விகிர்தி வருடம் புரட்டாதி மாதம் 18ம் திகதி திங்கட்கிழமை

அச்சுப் பிரதி

 
ஒபாமாவுக்கு உதவிய காந்தி சுயசரிதை: அமெரிக்க அமைச்சர் தகவல்

ஒபாமாவுக்கு உதவிய காந்தி சுயசரிதை:
அமெரிக்க அமைச்சர் தகவல்

காந்தி பிறந்தநாளையொட்டி, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற காந்தி பிறந்தநாள் விழாவில், அமெரிக்க வெளியுறவு உதவி மந்திரி ராபர்ட் பிளேக் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், மகாத்மா காந்தியின் சுயசரிதையும், அகிம்சை வழியில் அவர் போதித்த சமூக நீதி குறித்த போதனைகளும்தான், அதிபர் ஒபாமா தனது வாழ்க்கையை வடிவமைத்துக்கொள்ள உதவியதாக குறிப்பிட்டார், காந்தியும், மார்ட்டின் லூதர் கிங்கும்தான், தனது கதாநாயகர்கள் என்று ஒபாமா பல தடவை கூறி இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.