ஹிஜ்ரி வருடம் 1431 ஷவ்வால் பிறை 09
விகிர்தி வருடம் புரட்டாசி மாதம் 02ம் திகதி சனிக்கிழமை

அச்சுப் பிரதி

 
நச்சுத்தன்மை நிறைந்த காய்கறிகள் பயன்பாட்டால் நோய்கள் அதிகரிப்பு

நச்சுத்தன்மை நிறைந்த காய்கறிகள் பயன்பாட்டால் நோய்கள் அதிகரிப்பு

உணவுகளில் நச்சுத் தன்மை கலப்பதால் மக்களுக்கு ஏற்படக்கூடிய நோய்த் தாக்கங்களில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டிய கடப்பாடு இன்று ஒரு முக்கிய பிரச்சினையாகும்.

விவசாய உற்பத்தி நடவடிக்கைகளில் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்துவதால் நச்சுத் தன்மை கலந்த காய் கறிவகைகளையே மனிதன் தன் அன்றாட உணவுக்கு பயன்படுத்த வேண்டியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் புற்றுநோய் போன்ற கொடிய நோய்த் தாக்கங்களின் அதிகரிப்புக்கு விவசாயிகள் இரசாயனக் கலவைகளைப் பயன்படுத்துவதும் ஒரு காரணம் எனக் கூறப்படுகின்றது.

இதனால் இரசாயனப் பொருள்களைப் பயன்படுத்தாதவாறு நவீன தொழில்நுட்பங்களை உள்வாங்கி விவசாய உற்பத்தியை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பும் தேவையும் இன்று முக்கியம் பெறுகின்றது.

மக்களது உணவுப் பயன்பாட்டுக்கு இரசாயனக் கலவைகள் பயன்படுத்தப்ப டாத விவசாயப் பொருள்களை உண் டுபண்ணுவதற்கான தொழில்நுட்பங் களை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்து வதில் யாழ் விவசாயத் திணைக்களம் முனைப்புடன் உள்ளது என்பதன் எடு த்துக்காட்டாகவே இம்முறை இடம்பெ றும் விவசாயக் கண்காட்சி அமைகிறது.

இன்று சனிக்கிழமை 18.09.2010 முதல் திங்கட்கிழமை 20.09.2010 வரை நடைபெறவுள்ள இந்த ஆண்டிற்கான விவசாய விலங்கு வேளாண்மைக் கண்காட்சி ‘சந்தைப் பொருளாதாரத்தை நோக்கிய சூழல் பாதுகாப்புடனான விவசாய உற்பத்தி’ என்ற தொனிப் பொருளைக் கொண்டு சேதனப் பசளைகளைப் பயன்படுத்தி நச்சுத் தன்மைகளற்ற விவசாய உற்பத்திப் பொருள்களை நுகர்வோர் பெற்றுக் கொள்வதன் மூலம் அவர்கள் பாதுகாப்பான உணவுப் பொருள்களைப் பெறக்கூடியதான விவசாயப் பொருள்களை உற்பத்தி செய்வதற்கான அறிவையும் திறனையும் விவசாயிகள் பெறுவதற்கு வாய்ப்பை அளிக்கிறது என யாழ். விவசாயப் பணிப்பாளர் எஸ். சிவகுமார் கூறுகிறார்.

அதற்கு உகந்த வகையில் விவசாயப் பொருள்களுக்கான மாதிரி உற்பத்தித் துண்டங்களை விவசாயத் திணைக்களத்தைச் சேர்ந்த அனைத்து உத்தியோகத்தர்களும் இணைத்து அமைத்துள்ளனர்.

விவசாயிகள் இரசாயன உரங்களுக்குப் பதிலாக பயன்படுத்தக்கூடிய சேதனப் பசளைகள் மண்புழு உரம் மண்புழுத் திரவம் கூட்டெரு தாவரவியல் பீடை நாசினி தாவர அடிப்படையிலான திரவப் பொருள்களைத் தயாரிக்கும் தொழில்நுட்ப முறைமைகள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

விவசாயத் திணைக்களத்துடன் விவசாய திணைக்கள ஆராய்ச்சி நிலையம், யாழ். பல்கலைக்கழக விவசாய பீடம், கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்களம், வானிலை அவதான நிலையம், கமநல அபிவிருத்தித் திணைக்களம், சுதேச மருத்துவத் திணைக்களம், தென்னை பயிர்ச்செய்கைச் சபை, பனை வள அபிவிருத்திச் சபை ஆகிய திணைக்களங்கள் ஒன்றிணைந்து திருநெல்வேலி விவசாய வளாகத்தில் நடத்தும் இக் கண்காட்சியில்,

இரசாயனக் கலவைகளைப் பயன் படுத்தாத சேதனப் பசளைகளின் பய ன்பாட்டுடன் காய் கறிகளை உற்பத்தி பண்ணக்கூடியதும் தூர நோக்குடன் விவசாய உற்பத்திகள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய தொழில் நுட்பங்களை விவசாயிகளும் பொது மக்களும் தெரிந்து கொள்ளக்கூடியதாக அமையும். மரக்கறிச் செய்கைகளுக்கான காட்சித்துண்டம் மற்றும்

குடாநாட்டில் எமது பாரம்பரிய மருத்துவம் முறையான ஆயுர்வேத மருத்துவச் சிகிச்சை நிலையங்கள் தற்சமயம் பல்வேறு பிரதேச சபைகளூடாகவும் நடத்தப்பட்டு வருகின்றது. ஆயுர்வேத மருந்துகள் உற்பத்திக்கென மூலிகைகளைப் பெரிய அளவில் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. இதனால் மூலிகைச் செய்கைக்கான மாதிரித் துண்டமும் கண்காட்சியில் இடம்பெறுகின்றது. இதில் 200க்கும் அதிகமான மூலிகைச் செடிகள் உள்ளன. பாதுகாப்பான மூலிகைச் செய்கைகள் குறித்த விளக்கங்களும் வழங்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் வர்த்தக ரீதியாகச் செய்கை பண்ணப்படும் பயிரினங்களில் வாழை முன்நிலையில் உள்ளது. 2008ல் இடம்பெற்ற அனர்த்தம் காரணமாக யாழ் குடாநாட்டில் வாழைச்செய்கை பெரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது. இதன் பாதிப்பில் இருந்த விவசாயிகள் மீள புதிய இனங்களையும் அதிகரித்த உற்பத்தியையும் மேற்கொள்ள வேண்டிய தேவை உள்ளது.

சிறந்த முறையில் சந்தைப்படுத்தலுக்கு உகந்ததாகவுமான வாழைச் செய்கை முறைமைக்கான காட்சித் துண்டம் இம்முறை இடம்பெறுகிறது. இதில் யாழ் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட கப்பல், கதலி, இதரை உட்பட ஒன்பது ரகமான வாழைப் பயிர்களுடன் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய கவன்டிஸ் என்ற வாழை இனமும் வரட்சி கூடிய இடங்களில் உற்பத்தி செய்யக்கூடிய அபிஷேக மொந்தனும் அறிமுகமாகிறது. அத்துடன் தக்காளி, மிளகாய் உட்பட முக்கிய பயிரினங்களில் உற்பத்தி குறித்த மாதிரிகளும் இடம்பெறும்.

சந்தைப் பொருளாதாரத்தை நோக் கிய பாதுகாப்புடனான இந்த விவசா யக் கண்காட்சியில் விவசாய உற்பத்தி தொடர்பான புள்ளிவிபரங்கள் யாழ். மாவட்ட மண் வளம் மண் சம்பந்த மான பிரச்சினைகளுக்குத் தீர்வு, உயர்தர நாற்றுக்களின் உற்பத்தி மண்ணின்றிய பயிர்ச்செய்கை, நீர் முகா மைத்துவம், நிலத்தடி நீரு சேமிப்பு நிலைபேறான வீட்டுத் தோட்டம் ஒருங்கிணைந்த விவசாயப் பண்ணை, பண்ணைப் பெண்கள் விரிவாக்கச் செயற்பாடு தென்னை பனை வள அபிவிருத்திகள் காளான் செய்கை, பண்ணை இயந்திரங்களை மேம்படுத் தல் போன்ற இன்னோரன்ன 24 பயன்பாடுகள் குறித்த அறிவினைப் பார்வையாளர்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

கண்காட்சியைப் பார்வையிடுவோரின் நன்மை கருதி விவசாயப் பிரசுரங்கள் விதைகள் பழ மற்றும் அலங்கார நாற்றுக்கள் என்பனவும் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளது. காட்சியில் விவசாயம் தொடர்பான தனியார் நிறுவனங்களும் பங்குபற்றுவது குறிப்பிடத்தக்கது.

கண்காட்சியை பாரம்பரிய தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் அபிவிருத்தி முயற்சி அமைச்சர் கே. என். டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைக்கிறார்.

பல்வேறு திணைக்களங்களையும் சேர்ந்த அதிகாரிகள் காட்சியின் விருந்தினர்களாக இடம்பெறுகின்றனர்.

விவசாயிகளுக்கும் பொதுமக்களுக்கும் சிறந்த பயனையும் அறிவுத் திறனையும் தரக்கூடியதாக கண்காட்சி அமையும். அதனைப் பார்வையிடுபவர்கள் அதிஷ்டசாலிகளே.