ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

அச்சுப் பிரதி

 
2000 குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்

2000 குடும்பங்களுக்கு துவிச்சக்கரவண்டிகள்

கிளிநொச்சி, முல்லைத்தீவு பிரதேசங்களில் மீளக்குடியமர்த்தப்பட்ட இரண்டாயிரம் குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ள தாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி. ஏ. சந்திரசிறி தெரிவித்தார்.

மீளக்குடியமர்த்தப்பட்ட மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்தும் நோக்குடன் “வடக்கின் வசந்தம்” வேலை த்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. நேற்றைய தினம் 600 குடும்பங்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டதாக வும் அவர் தெரிவித் தார்.

புதுமாத்தளன் பிரதேசத்தில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த துவிச்சக் கர வண்டிகள் படையினர் மூலம் திருத்தி யமைக்கப்பட்டு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இலவசமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. ஒரு குடும்பத்திற்கு ஒரு துவிச்சக்கர வண்டி வீதம் வழங்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார். (ஜ)