ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

அச்சுப் பிரதி

 
முஸ்லிம் பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

சீனன்கோட்டையில்

முஸ்லிம் பிரமுகர்களுடன் ஜனாதிபதி, பிரதமர் சந்திப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க ஆகியோர் கடந்த 3ம் திகதி பேருவளை சீனன்கோட்டைக்கு விஜயம் செய்தனர். பேருவளை நகர சபை முன்னாள் தலைவர் மர்ஜான் அஸ்மி பZலின் இல்லத்தில் நடைபெற்ற விசேட வைபவ மொன்றில் ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துகொண்டனர்.

ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள், சிங்களவர்கள் பங்குகொண்ட இந் நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நீண்ட நேரம் தங்கி நின்று விருந்துபசாரத்தில் பங்குபற்றியதுடன் முஸ்லிம்களுடனும் கருத்துப் பரிமாறிக்கொண்டார்.

மேல் மாகாண சபை முன்னாள் உறுப்பினரும் பேருவளை ஸ்ரீல. சு. கட்சி முன்னாள் அமைப்பாளருமான எம். எஸ். எம். பZல் ஹாஜியார் ஜனாதிபதி யையும் பிரதமரையும் வரவேற்றார். ஜனாதிபதி, பிரதமர் ஆகியோரை சந்திப்பதற்கென நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்கள் குழுமியிருந்ததையும் காணக்கூடியதாக இருந்தது.

பZல் ஹாஜி யாரின் குடும்பத்திற்கும் மஹிந்த ராஜபக்ஷ வுக்குமிடையிலான உறவு நீண்டகாலமாக இருந்து வருகிறது. இரத்தினக் கல் வர்த்தகர் ஹுஸைன் ஸாலி, சவூதி அரேபியாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் தேசபந்து நவ்பல் எஸ். ஜாபிர் ஆகியோருடன் ஜனாதிபதி உரையாடினார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முஸ்லிம்களுக்கு ஆற்றிய சேவைகளுக்காக இங்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முஸ்லிம் சமூகத்தின் பூரண ஆதரவு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு என்றும் உண்டு என பZல் ஹாஜியார் சொன்னார். (ர – ஜ)