ஹிஜ்ரி வருடம் 1431 முஹர்ரம் பிறை 18
விரோதி வருடம் மார்கழி மாதம் 21ம் திகதி செவ்வாய்க்கிழமை

அச்சுப் பிரதி

 
முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம்

விரைவில் அறிமுகம் - ஜனாதிபதி

முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்ப னவு வழங்கும் திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள முன்பள்ளி ஆசிரியைகளுடனான சந்திப்பு அலரி மாளிகையில் நேற்று நடைபெற்றது. இவ்வைபவத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்ட வாறு குறிப்பிட்டார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந் தும் உரையாற்றுகையில், கடந்த கால ஆட்சியாளர்கள் பாலர் கல்வி குறித்து கவனம் செலுத்தவில்லை. ஆனால் நீண்ட காலம் நிலவி வந்த இக்குறை பாட்டை நீக்கும் வகையில் முன்பள்ளிக் கல்வியில் நாம் விசேட கவனம் செலுத்தி யுள்ளோம்.

இதற்கென தெளிவானதும் ஒழுங்குமுறையானதுமான வேலைத் ததட்டங்களை நாம் தயாரித்திருக்கின்றோம். இத்திட்டம் விரைவில் செயலுருப்படுத்தப் படும். இத்திட்டத்தின் கீழ் முன்பள்ளி ஆசிரியைகளுக்கு கொடுப்பனவு வழங்கும் திட்டம் விரைவில் ஆரம்பித்து வைக்கப்படும்.

இந்த நாட்டின் எதிர்கால சந்ததியினருக்கு சிறந்த கல்வி வழங்குவதற்கான அடித்தளத்தை முன்பள்ளி ஆசிரியைகள் வழங்குகின்றார்கள்.

அவர்களது பணியை நான் கெளரவிக்கின்றேன். கடந்த முப்பது வருட கால பயங்கரவாதத்தை நாம் முழுமையாக ஒழித்துக் கட்டியுள்ளோம். அச்சம், பீதியற்ற சூழல் உருவாக்கப்பட் டுள்ளது. சுதந்திரமாக நடமாடும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கின்றோம். கடந்த கால ஆட்சியாளர்களால் முழுமையாக ஒழித்துக்கட்ட முடியாது போன பயங்கரவா தத்தை நாம் குறுகிய காலத்தில் ஒழித்துக் கட்டியுள்ளோம். பயங்கரவாதத்திற்கு முழு உலகமுமே அச்சப்படுகின்றது.

அப்படியிருந்தும் நாம் பயங்கரவாதத்தை ஒழித்துக் கட்டி உலகிற்கு முன்னுதாரணம் மிக்கவர்களாகத் திகழுகின்றோம்.

யுத்தத்துக்கு மத்தியிலும் அபிவிருத்திப் பணியை முன்னெடுத்தோம். கடந்த ஆட்சியாளர்களைப் போன்று பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட தற்காக அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் இடைநிறுத்தப்படவில்லை. (ர – ஜ)