ஹிஜ்ரி வருடம் 1430 துல்ஹஜ் பிறை 20
விரோதி வருடம் கார்த்திகை மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை

அச்சுப் பிரதி

 
குத்துச்சண்டைப் போட்டி; ஜாமியுல் அஸ்ஹர் கல்லூரி வெற்றி

குத்துச்சண்டைப் போட்டி; ஜாமியுல் அஸ்ஹர் கல்லூரி வெற்றி

அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான டி. பி. ஜாயா கிண்ணத்தக்கான குத்துச் சண்டை போட்டித் தொடரில் கண்டி மாலட்டத்தைச் சேர்ந்த உடத்தலவின்னை மடிகே, ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி இரண்டு வெள்ளிப் பதக்கங்களும், ஒரு வெண்கலப் பதக்கமும் பெற்று அகில இலங்கை பாடசாலைகள் தரப்படுத்தும் குத்துச்சண்டை போட்டித் தொடரில் 6 இடங்களைப் பெற்றுக்கொண்டது.

இப்போட்டி கிரியுள்ள விக்ரமசீலா தேசிய பாடசாலையில் நடைபெற்றது.

ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் விள¨யாட்டுத்துறையை அபிவிருத்தி செய்தல் என்ற யு. பி. ஏ. யின் வேலைலத் திட்டத்துக்கமைய அதன் மைப்பாளரும், பாடசாலை விளையாட்டுத் துறைப் பொறுப்பாசிரியருமான ஜனாப் ஏ. ஜி. எம். நஜீப் விளையாட்டுத்துறை அபிவிருத்திக்கான வேலைத் திட்டமொன்றை வடிவமைத்துள்ளார்.

குத்துச் சண்டைப் போட்டியில் தமிழ் மொழி பாடசாலைகளில் ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரியே தொடர்ந்து, தேசிய ரீதியில் நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

ஜாமிஉல் அஸ்ஹரின் குத்துச் சண்டை துறையை ஊக்குவிக்குமுகமாக அமைச்சர் பைசர் முஸ்தபா இப்பாடசாலைக்குத் தேவையான அனைத்து குத்துச்சண்டை உபகரணங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாடசாலையின் குத்துச் சண்டை பயிற்றுவிப்பாளரான எம். ஏ. ஆர். எம். ரிஸ்னி மாணவர்களுக்கு தனது நன்றிகளைத் தெரிவித்துள்ளார்.

* எம். எம். பசான் 13- 15 வயது 35- 37 கிலோ வெள்ளிப்பதக்கம்.

* எம். என். எம். வசீம் 15- 17 வயது 50- 52 கிலோ வெள்ளிப்பதக்கம்.

* எம். ஆர். எம். ரஹ்மான் 13- 15 வயது 39-41 கிலோ வெண்கலப் பதக்கம். (அ)