ஹிஜ்ரி வருடம் 1430 துல்கஃதா பிறை03
விரோதி வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி வியாழக்கிழமை

அச்சுப் பிரதி

 
பு+ட்டி வைத்த நூலகங்களைத் திறந்து அறிவுக்கண் திறக்க வழியமைப்போம்!

பு+ட்டி வைத்த நூலகங்களைத் திறந்து அறிவுக்கண் திறக்க வழியமைப்போம்!

வாசிப்பின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒக்டோபர் மாதம்
 

வாசிப்பின் முக்கியத்து வத்தை உணர்த்தும் மாதமாக ஒக்டோ பர் மாதம் அமைந்துள்ளது. அதில் சில பாடசாலை மாணவர்கள் ஏதோ தம்மால் இயன்ற ஒரு ஊர்வலத் தையோ, கட்டுரை, கவிதைப் போட் டியையோ நடத்துவர். ஊரிலுள்ள நூல்நிலையத்தில் இம்மாதம் வாசி ப்பு மாதம் என்ற கொட்டை எழுத்து டன் காணப்படும் வாசகங்களுடன் முடிந்துவிடும் அம்மாதம்.

வாசிப்பின் மகத்துவத்தினை உணர்த்துகின்ற செய ற்பாடுகளில் பொதுவாக களமிறங்கு வது குறைவாகத்தான் உள்ளது. அந் நிலைமை மாற்றம் பெற்று நவீன உலகின் போக்குணர்ந்தவாறு தமது தாய் மொழியில் கூடிய கரிசனையு டன் சங்கமிப்பதில் கற்றோர் மற்றும் அறிவுடமை அமைப்புக்கள் வழித் துணை காட்டுவது சாலச்சிறந்தது எனலாம்.

உண்மையில் மொழியின் பண்பா ட்டு வளர்ச்சிக்கு வாசிப்பு மிக முக்கி யத்துவம் மிக்கதாக காணப்படுகிறது. ஏனெனில் மனிதன். பயன்படுத்துகி ன்ற தொடர்பாடல்களில் மொழி பிரதானமான பாத்திரத்தை வகிக்கி றது. மொழியின் வளர்ச்சி இன்மை யால் வழக்கொழிந்த மொழிகள் பல உண்டு.

அதனை தவிர்ப்பதற்காக நமது தாய் மொழியான தமிழ்மொழி உலக பொதுமொழியாக மிளிர வேண்டுமென நாம் அனைவரும் ஆசைப்படுகின்றோம்.

அதேவேளை மொழியின் உபயோகம் குறைந்து சென்றால் ஒரு காலத்தில் தமிழ் மொழியா? அது எப்போது இருந் தது? என்பது கேள்விக்குறியாக வரு வதற்கு முன்னர் மொழியில் ஆர்வத் தையும், ஆசையையும், அதன் இனி மையையும் நாளைய சந்ததிக்கு ஏற் படுத்தும் நோக்கில் வாசிப்பின் முக் கியத்துவத்தை உணர்த்திட நமது தமிழ் மொழியை நாம் போற்றிப் பாதுகாத்திட இம்மாதத்தினை பயன்படுத்தி வருடம் முழுவதும் நிலைபெற முயற்சிப்போம்.

பாடசாலைக் கல்வியில் வாசிப்பின் முக்கியத்துவம்

‘வாசிப்பானது ஒரு மனிதனை முழுமையாக்குகிறது’ என்பர். உண் மையில் மொழியின் அடிப்படை யான கூறுகளாக ‘செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு, எழுத்து’ ஆகிய மொழித் திறன்களை உள்ளடக்கிய தாகவே காணப்படுகிறது எனலாம்.

1997 இன் பின்னர் நமது கல்வித்திட் டத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கல் விச் சீர்திருத்தத்தின் மூலம் எதிர்பார்க் கப்படும் தேசிய குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக சில அடி ப்படையான தேர்ச்சிகளை மையப் படுத்தியவாறு பாடசாலை கலைத் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.

அதன்படி பார்க்கின்றபோது முத லாவதாக ‘தொடர்பாடல் தேர்ச்சி கள்’ மூலமாக ‘எழுத்தறிவு, எண்ண றிவு, சித்திர அறிவு, தகவல் தொழில் நுட்ப தகைமை ஆகிய நான்கு வகை துணைத் தொகுதிகளாக வகுக்கப் பட்டு, அதில் வருகின்ற, ‘கவனமாக செவிமடுத்தல், தெளிவாகப் பேசுதல், கருத்தறிய வாசித்தல், சரியாகவும், செம்மையாகவும் எழுதுதல், பயன் தருவகையான கருத்துப் பரிமாற்றம்’ ஆகியவற்றை இத்தொடர்பாடல் தேர்ச்சியின் ஊடாக முக்கியத்துவம் பெற்றுள்ளதையும் அவதானிக்கலாம்.

எனவேதான் கல்வித்துறையில் குறிப் பாக ஆரம்பக் கல்விப் புலத்தில் வாசிப்பின் முக்கியத்துவத்தினை உண ர்த்தும் முகமாக ‘மெளனமாக வாசித் தல், உரத்து வாசித்தல்’ என்கிற சொற் கள் கற்றல் - கற்பித்தலில் மொழிப் பாடத்தில் முக்கியத்துவம் பெற்று விளங்குவதையும் காணலாம்.

பாடசாலையில் ஆரம்ப வகுப்புக்க ளில் கற்கின்ற ஒரு மாணவனுக்கு ஆசிரியர் குறிப்பாக மொழிப்பாடத் தினை நன்கு விளங்கக்கூடியவாறு கற்பித்தல் பணிபுரிதல் வேண்டும். ஆசிரியர் பாடத்திற்கான விடயக்கூறு களை தெளிவாக புரிந்து கற்றல் - கற்பித்தல் செயற்பாடுகளின் போது பொருத்தமானவாறு ஒன்றிணைத்து செயற்படுத்தல் அவசியமாகும்.

மொழிரீதியாக ஆரம்பப்பிரிவு வகு ப்புக்களில் எதிர்பார்க்கப்படுகின்ற தேர்ச்சிகளில் பின்வரும் விடயங்கள் வாசிப்பில் முக்கியத்துவம் பெற்றுள் ளதாக கருதப்படுகிறது. அதாவது

கவிதை, பாடல், கதைகேட்டும்,
வாசித்தறிதல்.
பிழையின்றி உச்சரித்து உரத்து
வாசித்தல்.
செவிமடுத்தல், பேச்சு, வாசிப்பு,
எழுத்து சம்பந்தமான
நற்பழக்கங்கள் பற்றியமை.
எழுத்துப் பொறிமுறைகளை
அனுசரித்து வாசித்தல்.வாசித்தபின் கிரகித்து வெளிப்படுத்துதல்.
சொற்களஞ்சிய விருத்திக்காக
வாசித்தல்.

இரசனையுடன் வாசித்தல்.

இவ்வாறாக ‘தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையான’ வகுப்பு மாணவர்களின் நலன் கருதியதாக இவ்வகையான தேர்ச்சிகள் வாசிப் பினை முன்னிலைப்படுத்துவதற்காக ஆசிரியர்களால் முன்கொண்டு செல்லவேண்டுமென கல்விப் புலத்தினால் எதிர்பார்க்கப்படுகிறது.

நமது நாட்டில் தமிழ் மொழியா னது நீண்டகாலமாகவே பாலர் முதல் பல்கலைக்கழகம் வரை போதிக்கப்பட்டு வருவதுடன் சகல பாடங்களும் தாய்மொழியிலேயே தான் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. இருப்பினும் மொழி கற்றலில் ஒரு தொகை மாணவர்கள் பரீட்சைகளின் போது வெளிப்படுத்துகின்ற வெளி ப்பாடானது பூச்சியமட்டத்தில் காணப்படுவதானது கவலையளிப் பனவாகவே உள்ளது.

காரணங்கள் பலவாறு கூறப்பட்டாலும் ஆரம்ப வகுப்புக்களின்போது கற்பித்தல் முறையிலுள்ள குறைபாடுகளும், நவீனத்துவமிக்கதான தொழில்நுட்ப ரீதியிலான கற்றல் கற்பித்தலை விடு த்து காலத்திற்குதவாத பாரம்பரிய கற்றலையே சிலர் மேற்கொள்வதன் பயனாக வாசிப்பு, எழுத்து போன்ற திறன்களில் இருள் சூழ்ந்த தன் மையே இன்றும் தொடர்வதாக ஆய்வாளர்கள் கூறிநிற்கின்றனர்.

ஆரம்ப வகுப்புக்களில், மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத் துவதற்கான பல்வேறு பிரயத்தனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறது. அந்தவகை யில் பாடசாலைகளில் நடைபெறும் பல்வேறு புறக்கீர்த்தி நடவடிக்கைக ளில் மாணவர்களை ஈடுபடுத்துதல் சிறப்பானதாக அமைகிறது.

காலை ஆராதனையின் போது நற்சிந்தனை வாசித்தல், அன்றைய செய்திகளை வாசித்தல், மாணவர் மன்றங்களில் மாணவர்களை வாசிக்கச் செய்தல். இவ்வாறு அனைத்து மாணவர்க ளுக்கும் சந்தர்ப்பங்கள் வழங்குகின்ற போது பேச்சாளர்களாகவும் அறிவிப் பாளர்களாகவும், சமுதாயத்தை வழி நடத்துபவர்களாகவும் அமைவதற்கு அடித்தளமாக அமைவதற்கு வாசிப்புத்துறை துணைபுரிகிறது என்றால் மிகையாகாது.

எனவேதான் மொழித்திறன்களை மேம்படுத்தும் வகையில் பாடசாலை மட்டுமல்லாது வீடும், வீட்டுச் சூழலும் உதவ வேண்டும் என்பதையும் நாம் கருத் தில் கொள்ள வேண்டும்.

ஆசிரியர் மொழியை கற்பிக்கின்ற அணுகுமுறைகளில் கீழ்ப்பிரிவு மாண வர்களுக்கு கதைகூறல், பாடுதல், நடித்தல், பாவனைசெய்தல், செய்து காட்டுதல், வாசித்தல், பேசுதல், உரையாடுதல், பரிமாறுதல், எழுது தல், வரைதல், விளக்கங்கள் கூறுதல் போன்றவற்றை உள்ளடக்கியதான செயற்பாடுகளிலும், விளையாட்டுக் களிலும் மாணவர்களை ஈடுபடுத்துவதன் மூலம் மொழித்திறனை மேம்படுத்தவும் ஆசிரியர் உதவலாம்.

கற்றலின் ஊடாக மொழி பயன் படுகிறது. எனவேதான் வாசிப்பு என்பது எழுத்தில் உள்ளவற்றை கண்களால் பார்த்து, வாயால் உச்சரித்து பொருளை உணர்த்துவது என்பதாக கூறுவர். வாசித்தல் மூலமாக சொற்களை காணுதல், உச்சரித்தல், பொருள் உணர்தல் ஆகிய மூன்று கூறுகள் உள்ளட ங்குவதுடன், வாசித்தல் மாண வர்களிடையே பல்வேறு திறன் களையும் விருத்தி செய்யவும் உதவுகிறது எனலாம்.

இன்று வாசிப்புத்துறை நவீன தொடர்பாடல் சாதனங்களால் சற்று விரிவடைந்து செல்கின்றது. எந்த ஒரு விடயத்தையும் வாசித்தறிந்தே உணர்ந்து கொள்ளமுடிகிறது. ஆதலால்தான் சிந்தனை சிறப்பாக அமைந்திட அறிவை வளர்த்துக் கொள்ள, தான் வாசிக்கும் சொல்லின் பொருள் அறிந்து அதன்படி ஒழுகுவதற்கு வாசிப்பு துணைபுரிகிறது.

பாடசாலைகளில் வாசிப்பு என்கிற திறனை மேம் படுத்துவதற்காக குறிப்பாக ஆரம்பப் பிரிவு மாணவர்கள் மாத்திரமின்றி இடைநிலை மாணவர்களுக்கும் பெரிய எழுத்துக்களுடன் கூடிய சிறிய கதைப்புத்தகங்கள் கவிதை, கட்டுரை போன்ற நூல்களை வாசித்தறிந்து பொருள் உணர்கின்றபோது வாசிப்பு மேம்படுவதற்கு வழித்துணையாக அமைகின்றன.

எனவேதான், எந்தவொரு விடய மானாலும் கேட்டமாத்திரத்தில் அவ ற்றினை அறிந்து செயற்படும் தன்மை யுள்ளவர்கள் வாசிப்பில் திறமையுள்ள வராகவே காணப்படுவதால் பல்வேறு நூல்களை வாசித்தறிந்து அவற்றின் பொருளுணர்ந்து கொள்வதில் நாட்டமிக்க நயத்தினை சுவைமிக்கதாகவே அறிந்து செயற்படுதிறன் மேலோங்கி காணப்படுவர். ஆகவே வாசிப்பின் மூலம் முழுமை பெற்ற கவ்வியை, அறிவினை பெறலாம் அல்லவா?

நூலகங்கள் வாசிப்புத்துறையில் காட்டும் அக்கறை

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாடநூலில் (தமிழ்மொழி) இருந்து மொழித்திறன்களை விருத்தி செய்யக்கூடியவாறு பயன்படுத்தல் வேண்டும். ஆரம்ப வகுப்புக்களில் மாணவரில் விரைவான வாசிப்பினை ஏற்படுத்துவதற்காக பாடசாலையின் நூலகங்கள் மூலம் வாசிப்பதற்கு புத்தகங்களை வழங்கி வாசிப்பினை மேம்படுத்த ஆசிரியர் முனைதல் வேண்டும்.

இன்று அனைத்து பாடசாலைகளிலும் நூலகங்கள் காணப்படுகின்றன. அரசு நூலகங்களுக்காக பல இலட்சங்களை செலவு செய்து நூல்களை வழங்கிவருகின்றன. கடந்த 1995 ஆம் ஆண்டிலிருந்து பாடசாலைகளுக்கு நூல்கள் வழங்கப்படும் நிகழ்வு ஆரம்பமாகின. இதன் மூலம் மாணவர்களின் துணைவாசிப்பு நூல்கள் இல்லாத குறைபாட்டை அரசு மேற்கொண்டதன் விளைவு, வாசிப்பில் பின்தங்கிய நிலை காணப்படுகிறது என்கிற ஆய்வுகளின் அடிப்படையில் காணப்பட்ட குறைபாட்டை நிவர்த்திக்கவே பாடசாலை நூலகங்கள் செயற்படுகின்றன.

நியுசிலாந்து, பின்லாந்து போன்ற நாடுகளில் வாசிப்போர் தொகை கூடுதலாக காணப்படுகின்றது. நமது நாட்டைப் பொறுத்தளவில் இத்தொகை கணிசமான உயர்வை பெறவில்லை. காரணம் வாசிப்பின் உன்னத பெறுமானம் அறிந்திராதோர் அதிகம். வேறு வேலைகளில் ஈடுபடுவதும், மற்றவரின் பிரச்சினையில் தலையிடுவதும், வீணற்ற விடயங்களில் வீணே காலம் கழிப்பதிலும் காணப்படுகின்றனர்.

இந்த நிலை மாற்றப்பட்டு ஊரிலுள்ள நூலகங்களை நல்லமுறையில் பயன்படுத்த முயற்சிக்க வேண்டும்.

பாடசாலையில் காணப்படுகின்ற நூலகங்களை பூட்டிவைக்கின்ற நிலைமை மாற்றம் பெற்று மாணவர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நூல்கள் வழங்கப்படுவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, பயன்பெற்று வாசிப்பில் ஆர்வம் ஏற்படுவதற்கான சிறப்பு நிகழ்வுகளை நடத்துவதன் மூலமாக எப்போதும் வாசிப்பதும், வீட்டில் ஒரு தினசரி நாளிதழ் பெற்றுக்கொள்கின்ற மனோநிலையை ஏற்படுத்துவதனையும் நோக்காக கொண்டு செயற்படுதல் அவசியமாகும்.

நூலகங்களில் மாணவர்களுக்கு மட்டுமல்லாது அனைத்து நபர்களுக்கும் அறிவு விருத்தியை, உலக நடப்புக்களை, மற்றும் நாட்டு விவகாரங்கள், அரசியல், பொருளாதார, பொது அறிவு, விளையாட்டு, கலை கலாசாரம் போன்ற அனைத்து வகையான விடயங்களையும் அறிந்து கொள்வதற்கு இந்நூல்நிலையங்கள் உதவுகின்றன. வாசிக்கத் தெரிந்த மக்களின் அறிவுப்பசிக்கு தீனியாக நூல்நிலையங்கள் அமையப்பெற்றுள்ளதோடு பிரதேச வாழ் மக்கள் அனைவரும் பயன்படக்கூடியவாறு அந்நிலையங்கள் அமைந்து காணப்படுதலும் வேண்டும்.

ஒருகாலத்திலே தென்கிழக்காசியாவிலேயே மிகக்கூடிய நூல்களைக் கொண்ட புகழ்பூத்த நூலமாக யாழ்ப்பாண நூல் நிலையம் அமைந்திருந்தது. வக்கிரமிக்கவர்களால் வஞ்சிக்கப்பட்டு சில கல்நெஞ்சமுடையோரால் தீயிடப்பட்டமையை அன்று அனைவருமே சபித்தனர். நூல் நிலையங்கள் அவ்வளவு முக்கியத்துவம் மிக்கதாக அமைந்திருந்தமையால் மக்களின் பல்வேறு அறிவுத்தாகத்தின் பசிபோக்கிடும் இடமாக திகழ்வதற்கு வாசிப்பே பிரதான காரணியாக அமைந்து விடுகின்றது.

‘தேடிக்கற்றல் எனும் அறிவுக்காலம்’ இன்றுள்ளதால் நூல் நிலையங்கள் பெரிதும் உதவும் நடைமுறை உலகின் பலபாகங்களிலும் காணப்படுகின்றன. பாடநூலை மட்டும் நம்பி தமது கற்றலை மேற்கொண்டால் பயனே இராது. ஆதலால்தான் சுருங்கிவிட்ட உலகமயமாக்கல் காரணமாக பல்வேறு தகவல்களை பெற்றுக் கொள்ளும் இடமாக நூல்நிலையங்கள் காணப்படுகின்றன. வழிகாட்டும் பொக்கிஷாதிபதியாக காணப்படுகின்ற இந்நூல் நிலையங்களை மாணவர்களும், ஏன் அனைவருமே பயன்படுத்தி ஒழுகுதல் நலமே பயக்கும்.

அண்மையில் ஒரு நூல் நிலையத்தின பொறுப்பதிகாரி மிகவும் மனவேதனையுடன் கூறிய விடயம். அதாவது ‘ஊரின் மிகப்பெரிய நூல்நிலையம் பெரிய பெரிய பாடசாலைகளும் கல்வி நிலையங்களும் ஆயிரக்கணக்கில் கற்றவர்களும் மற்றவர்களும் ஒருங்கே வாழுகின்ற அவ்வூரில் தினசரிப் பத்திரிகைகளை மட்டுமே பார்க்க வருகின்றனரே தவிர இங்குள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களிலிருந்து நூல்களைப்பெற்று, நூல்களை வாசித்து அறிந்துகொள்ள, முன்வருவோர் குறைவாகவே உள்ளனர்.

அதுமட்டுமா? நூல் நிலையத்தில் புதிய புதிய அங்கத்தவர்களாக மாணவர்கள்தான் சேர்கின்றனரே தவிர பெற்றோர், கற்றோர் அங்கத்தவராக சேர்வதற்கு முன்வருவதும் குறைவாகவே உள்ளது’ என்பதாக அந்நூலகர் கூறுகிறார். உண்மையில் நூலகங்களில் இந்நிலை தவிர்க்கப்பட்டு யாவரும் அறிவினைத் தேடுகின்ற பல்கலைக் கழகமாக இதனைப் பயன்படுத்துதல் வேண்டும்.

மொழித்தேர்ச்சிக்கு முக்கியத்துவமிக்கதாக காணப்படுகின்ற வாசிப்பு துறையானது ‘வரிவடித்தினை அறிந்து கொள்ளல், ஒலித்தல், அதன் பொருள் உணர்தல்’ போன்ற முக்கிய கூறுகளை உள்ளடக்கியுள்ளது. எனவேதான் மாணவர்கள் தாம் வாசித்த சொல்லின் பொருளை அகராதி கொண்டு அறிந்து கொள்வதன் காரணமாக சிந்தனைப் பிரவாகம் பெருக்கெடுத்துச் செல்கின்ற கைங்கரியம் ஏற்பட்டு அதன் மூலமாக மொழித்தேர்ச்சியில் அதிக அக்கறையுடன் செயற்படுபவர்களாக மிளிர்வர்.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் கண்டறியப்பட்ட ஆய்வுகளின்படி வாசிப்பதில் மக்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே சுட்டிக்காட்டுவதுடன், அதற்கு காரணமாக பிறமொழியில் ஆர்வம் ஏற்பட்டு தாய்மொழியினை சற்று புறக்கணிக்கின்ற நிலைமை ஏற்பட்டதையும் குறிப்பிடலாம்.