வரு. 77 இல. 245

ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 25
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 29ம் திகதி வியாழக்கிழமை

THURSDAY, OCTOBER 15, 2009

உண்மையான தலைமைத்துவத்தின் சிறந்த வழிகாட்டியாக இயேசு

உண்மையான தலைமைத்துவத்தின் சிறந்த வழிகாட்டியாக இயேசு

“அறிவிலியே இன்றிரவே உனது உயிர் உன்னை விட் டுப் பிரிந்துவிடும் அப்போது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?” (லூக்கா 12 : 20)

ஆசை போடுகின்ற பாதைகளில் அசையாமல் நடக்க முயற்சி செய்து கொண்டிருப்பதுதான் மனித வாழ்க் கையில் நாம் எல்லோரும் காணுகின்ற “பலகீனப் பலப்பரீட்சை” பாதையில் நடந்து செல்லுகின்ற ஏழை யொருவன் பத்து ரூபா கண்டு எடுத்து விட்டால் அந்த பாதை முழுவதும் பணமாகவே கிடக்கக் கூடாதா? என நினைத்து பாதையை கவனமாக கண்களால் துளா விக் கொண்டு நடக்கின்றான்.

இதேபோலவே அதி கார ஆடையும், பண வெறியும் இந்த உலகின் பல் வேறு சாம்ராஜ்ஜியங்கள் உருவாகவும், அதே சாம்ராஜ் ஜியங்கள் ஆணவத்தினால் அழிந்ததையும் எத்தனையோ உண்மைப் பாத்திரங்கள் கூறிநின்றாலும், மனி தனை பேராசை துரத்திக் கொணடு இருப்பதைக் காணலாம்.

கூலியாள் முதலாளியாகவும்
தொண்டன் தலைவனாகவும்
தலைவனாகியவன் ஒரு நாட்டை ஆளவும்
நாட்டை ஆள்பவன் உலகை ஆளவும்

முயற்சி செய்த தனால்த்தான் பல உலக யுத்தங்கள் உருவாகி அதன் எச்சங்களாகிய போரும் வன்முறையும், அடக்கு முறைகளும் இன்று வரை உலகை ஆட்டிப் படைக் கின்றன.

ஆனால் இன்றைய வாசகங்கள் குறிப்பிடும் தலைமைத்துவமானது உலக ரீதியான தலைமைத்துவத் திற்கு அப்பாற்பட்டு எதையும் தாங்கிக் கொள்ளும் ஞானத்தின் தலைமைத்துவமாக, பொறாமை, காய் மகாரம் இல்லாத சமாதான நோக்குடனான தலை மைத்துவமாகவும், எல்லோரையும் மனிதர்கள் என்ற ரீதியில் சமமாக அன்பு செய்யும் குழந்தைக்கு உரிய குணங்களைக் கொண்ட தாழ்ச்சியின் தலைமைத்து வமாகவும் இருக்க வேண்டு என்று இன்றைய வாரத்தின் திருவாசகங்கள் எமக்கு எடுத்துரைக்கின்றன.

தலைவனாக இருக்க விரும்புபவன் முதலில் தொண் டனாக இருக்கட்டும் என்னும் வாக்கிற்கேற்ப இயேசு ஆண்டவர் தனது புதுமைகளால், பேராற்றல் நிறை போதனையால், ‘ரபி, மெசியா’ என அழைக்கப்பட் டாலும் தனது சீடர்களின் பாதங்களை பணிந்து கழுவி (யோவான் 13) இறுதியில் எல்லோருக்காகவும் தமது ஆவியைத் துறந்து உண்மையான தலைமைத்துவத்தின் அழியாக வழிகாட்டியாகவும் எம் எல்லோரினதும் ஆண்டவராகவும், ஆன்மீக அரசராகவும் அரசாட்சி செய்கின்றார்.

பதவி ஆசை என்பது ஒரு “போதை” இந்த ஆசைக்கு ஆட்பட்ட மனிதன் தவறுக்கு மேல் தவறுகள் செய்ய முயற்சி செய்து தனது வாழ்க்கையை அழித்துக் கொள் கின்றான். ஆனால் தலைவர்கள் எல்லோருமே அப்படி ப்பட்டவர்கள் என்று சொல்ல முடியாது. இந்த உல கில் வாழும் மனிதர்களுக்கு எல்லாம் உதாரண புருஷர் களாக வாழ்ந்து மடிந்த எத்தனையோ தலைவர்களை இந்த உலகம் கண்டுள்ளது.

எல்லாத் தலைவர்களுக்கும் சிகரமாக தனது மக்களுக் காக உயிர் உடல் ஆன்மாவை கையளித்து இறுதிநாள் வரை உங்களோடு இருப்பேன் என உறுதி கூறி இரவுபகல் எனப் பாராது எமக்காக நற்கருணையில் வீற்றிருக்கும் இயேசு ஆண்டவர் ஒருவரே தலைவர் களுக்கெல்லாம் தலைவர், ஆண்டவர்க்கெல்லாம் ஆண்டவர், அரசர்க்கெல்லாம் அரசர்.

“என்னிடம் இருந்து கற்றுக்கொள்ளுங்கள் நான் சாந்தமும் மனத்தாழ்ச்சியும் உள்ளவன்.”

 

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி

 

  •