ஹிஜ்ரி வருடம் 1430 ஷவ்வால் பிறை 24
விரோதி வருடம் புரட்டாதி மாதம் 28ம் திகதி புதன்கிழமை

அச்சுப் பிரதி

 
பார்வை இழந்தோருக்கு பக்கத்துணையாவோம்!

பார்வை இழந்தோருக்கு பக்கத்துணையாவோம்!

உலகிலே மனிதர்களாக பிறந்து விட்ட ஒவ்வொருவரும் தாம் பெறும் அறிவு, அனுபவம், ஆற்றல் என்பவற்றினூடாக விழிப்புணர்ச்சி பெறும் போது மனிதனின் அனைத்துத் தேவைகளும் துலக்கம் பெற்று ஈடேறி வருவதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

அதேவேளை கண்பார்வையற்ற விழிப்புலனற்ற மானிடப்பால் எமது கவனம் ஈர்க்கப்பட வேண்டிய நல்லதோர் வாய்ப்பினை உலகுக்கு துலாம்பரமாக வெளிச்சமிட்டு காட்டுவதே இவ்வெள்ளைப் பிரம்பு தினமாகும்.

வெள்ளைப் பிரம்பு தினம் என்றாலே மூக்கின் மீது விரல் வைத்து சிந்திப்பவர்கள் இதன் தாற்பரியத்தை உணராதிருப்பது சற்று கவலைக்குரியதாயினும் இன்றைய நிலையில் வெள்ளைப் பிரம்பு தினம் சமூக ரீதியில் மேலெடுக்கப்பட்டு எல்லோரது கவனத்தையும் ஈர்த்து வருவது மகிழ்ச்சிக்குரியதொன்றாகும்.

அண்மைக்காலம் முதலே அதாவது 1961 முதல் வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

இன்றைய உலகில் வருடத்தில் ஒரு நாள் ஏதோ ஒரு தினமாக பிரகடனப்படுத்தப்பட்டு அன்றைய தினம் பொதுக் கூட்டங்களும் கலை, கலாசார நிகழ்வுகளும், பரிசளிப்புகளும், விளையாட்டுக்களும் நடைபெறுவது வழக்கமாகும். இந்த குறிப்பிட்ட தினம் வண்ணம் வண்ணமாக மெருகூட்டப்படுவதை நாம் காணலாம்.

வருடத்தில் இவ்வாறான நாட்களின் தொகை அதிகரித்துச் செல்வதையும் நாம் மேலோட்டமாக அவதானிக்கலாம். குறிப்பிட்ட தின நிகழ்ச்சி அன்றைய தினத்தோடு முடிவடைவதால் மற்றும் இதன் உண்மையான பலாபலனை எதிர்பார்க்க முடியாது.

இத்தினத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஆக்கபூர்வமான செயல்திட்டங்கள் அடுத்த வருடத்தில் அதே தினத்தில் காரிய சாத்தியமான பலாபலன்களை நிறைவு செய்வதாக இருத்தல் வேண்டும். இல்லையேல் வெறும் பேச்சளவில் வீணே காலத்தை விரயமாக்கும் ஒரு செயலாக ஒரு தினமாக அமைந்து விடுதல் கூடாது.

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் ஒக்டோபர் 15 ஆம் திகதி விழிப்புனற்றோருக்கான வெள்ளைப் பிரம்பு தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இதன் பின்னணியினை நாம் ஆராய்வோமாயின் அது எம்மை இரண்டாவது உலக மகாயுத்தத்தின் இறுதிக்கு எம்மை இட்டுச் செல்கின்றது.

பெரும் அழிவுகளையும் மனித அவலங்களையும் உலகுக்கு விட்டுச் சென்ற இரண்டாம் உலக மகா யுத்தத்தின் முடிவுகளோ சொல்லும் தரமன்று.

இந்த யுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவதற்கு பயன்படுத்தப்பட்ட அணுகுண்டு ஜப்பானில் ஹிரோஷிமாவிலும், நாகசாகியிலும் வீசப்பட்ட பரிதாபக் கதை ஒரு கண்ணீர் காவியமாகும்.

இன்றும் கூட இப்பகுதிகளில் பிறக்கின்ற குழந்தைகள் பல குறைபாடுகளுடனேயே பிறப்பதையும் நாம் செய்திகள் மூலம் அறிகின்றோம். அவற்றுள் முக்கியமான ஒன்றாக யுத்தத்தை அடுத்து உருவாகிய கண்பார்வை அற்றோறின் கதையோ பெரும் பரிதாபமாகும்.

இவ்வாறு பெருமளவினோர் ஜப்பானில் பார்வை இழக்கவே அதற்கான சிகிச்சையினை பெற்றுக்கொள்வதற்காக அவ்வேளை ஜப்பானில் பிரபல்யமாக இருந்த ளிr. சிலீy யை மக்கள் நாடினர். இவ்வாறு பார்வை இழந்து வைத்தியரை நாடியவர்களின் கதையே பரிதாபகரமாகிவிட்டது.

தம்மை நாடி வந்தோரில் கூடியளவிலானோரின் பார்வையை வைத்தியரால் பெற்றுக்கொடுக்க முடியவில்லை. இத்தகையதொரு பரிதாபகரமான நிலைமையை எதிர்நோக்கிய ளிr. சிலீy மனிதர்கள் என்ற வகையில் அவர்களையும் சமூகத்தில் நடமாட வைப்பதற்கு வழிதேடினார். அதன் பிரதிபலனாக உருவானதே வெள்ளைப் பிரம்பாகும்.

ளிr. சிலீy யின் சிந்தனையில் விசையும் திசையும் (ணிobility anனீ லிriyantation)உதித்தது. ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் நகர்வதற்கு பயன்படுத்திய முறையில் வெள்ளைப் பிரம்பு மகத்துவம் பெறுகின்றது.

இதனை பயன்படுத்துவோர் விழிப்புலனற்றோர் ஆவர். இவ்விழிப்புலனற்றோர், ஒரு இடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு நகரும்போது அல்லது நடமாடும்போது அவர்களுக்கு பக்கத்துணையாக தாம் நகரும் இலக்கை நோக்கிய பயணத்திற்கும் வெள்ளைப் பிரம்பைப் பயன்படுத்துகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மலாக, விழிப்புணர்வு உள்ளோர் வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தி வருவோர் விழிப்புலனற்ற ஒருவர் என்ற வகையில் உறுதுணையாக அமைவது இவ்வெள்ளைப் பிரம்பே ஆகும்.

சன நெரிசலும், போக்குவரத்து சாதனங்களின் அதிகரிப்பும், பாதைகளைக் கடக்கும் போது ஏற்படும் நெறுக்கடிகளும் சாதாரண மக்களையே திக்கு முக்காடச் செய்யும்போது வெள்ளைப் பிரம்பினை பயன்படுத்தியவாறு, தம்மை இனங்காட்டியவாறு மேற்குறிப்பிட்டத் தடைகளை தாண்டிச் செல்வதும் இவ்வெள்ளைப் பிரம்பின் உதவியினாலேயே ஆகும்.

மனித நேயம் அருகிவருகின்ற இன்றைய நவீன யுகத்திலேயே தங்களது தேவைகளுக்கே நேரமின்றி பஞ்சாய்ப் பறக்கும் மானிடவர்க்கம் மற்றவன் எக்கேடுகெட்டாலும் தமது காரியம் நிறைவேறி விட வேண்டும் என்ற அவாவினாலேயே ஓடி உழைக்கின்றது.

எனவே அவர்களை குறை கூறுவதை விட தங்களுக்கென ஒரு துணையாக இவ்வெள்ளைப் பிரம்பை உருவாக்கி அதனை எங்களது கையிலேயே துணையாகத் தந்து எவரது உதவியுமின்றி தாமாகவே நகருவதற்கு இவ்வெள்ளைப் பிரம்பு ஒரு மனிதாகவே உதவுலவது விழிப்புலனற்றோருக்குக் கிடைத்துள்ள ஒரு வரப்பிரசாதமாகும். இதற்கான உலக அங்கீகாரம் 1969 இல் கிடைத்தது.

“வெள்ளைப் பிரம்பு” உலக விழிப்புலனற்ற சம்மேளனத்தினால் 1969 ஒக்டோபர் 15 முதல் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

விழிப்புலனற்ற இவர்கள் அங்கவீனர்கள் என்ற வரிசையில் நிரற்படுத்தப்படுகின்ற போதும் ஏனைய அங்கவீனர்களை விடவும் கல்வித்துறை உட்பட இதர பல செயற்பாடுகளிலும் துலக்கம் பெற்று வருகின்ற இவ்விழிப்புலனற்றோர் பல்கலைக்கழகம் வரை முன்னேறியுள்ளதோடு கணனி, தொலைத் தொடர்புக் கல்வி போன்ற இன்னோரன்ன பல துறைகளிலும் முன்னேறி வருகின்றனர்.

சாதாரண மாணவர்களுக்கும் ஏனைய மனிதர்களுக்கும் தாம் எந்த வகையிலும் சோடை போக வில்லை என்பதையே இக்கல்வித் துறையிலான விழிப்புணர்ச்சியும், கல்வியைத் தேடவும் அதற்காகக் நகரவும் இவ்வெள்ளைப் பிரம்பு எமக்கு உறுதுணையாக இருப்பதும் நன்றியுடன் நினைவுகூரப்பட வேண்டியதொன்றாகும்.